பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற 18,382 பேருக்கான
பணி நியமன கலந்தாய்வு நேற்று துவங்கியது.
முதல்கட்டமாக,பட்டதாரி ஆசிரியர்,சொந்த மாவட்டத்தில்,பணி பெறுவதற்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில் நடந்தது.சென்னை மாவட்டத்தில்,
எந்த பாடத்திலும்,காலி பணியிடங்கள் இல்லை என,
அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.அப்படியிருக்கும்
போது,மாவட்டத்திற்குள்,பணி நியமன கலந்தாய்வை
நடத்தியிருக்கக் கூடாது.இன்று நடக்கும், வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான
கலந்தாய்விற்கு அழைத்திருக்க வேண்டும்.இதற்கு மாறாக,சென்னை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 165
பேரும், நேற்று,மாவட்டத்திற்குள் நடந்த பணி நியமன
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.சேத்துப்பட்டு,
எம்.சி.சி.,மேல்நிலை பள்ளியில், 165 பேரும்,
காலையிலேயே குவிந்தனர். பல மணி நேரம்
காத்திருந்ததற்குப் பின்,"காலி பணியிடங்கள் இல்லை;
நாளைக்கு (இன்று) வாருங்கள்" என,அலுவலர்கள்
தெரிவித்தனர்.இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து,முதன்மைக் கல்வி அலுவலருடன்,
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல்,காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 2, "செட்" சான்றிதழ் நகல்களை ஒப்படையுங்கள் என,முதன்மைக்
கல்வி அலுவலர்கள் கூறியதால்,ஆசிரியர்கள் மத்தியில்
சலசலப்பு ஏற்பட்டது.இதுகுறித்து,டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறுகையில்,"பணி நியமனத்திற்கு முன், கடைசியாக ஒருமுறை சான்றிதழ்களை சரிபார்ப்பது,
வழக்கமான நடைமுறை தான்.அப்படித்தான்,
இப்போதும் நடந்தது,என, தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்