Posts

Showing posts from May, 2012

பள்ளிகளில் காலிப் பணியிட விபரங்கள் சேகரிப்பு

தமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்களை உடனடியாக வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் பாட வாரியாக ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப முடியாததால் அந்த இடங்களில் அருகில் உள்ள பள்ளிஆசிரியர்களை மாற்றம் செய்து பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்த கல்வியாண்டில் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடனே வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு

மாற்றப்பட்ட 20 முதன்மைக் கல்வி அலுவலர்களின் விவரம்

Image

கன்னியாகுமரி குலுங்கியது 10 ஆயிரம் ஆசிரியர்கள் பேரணி

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, கன்னியாகுமரியில் நேற்று மாலை 10 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று மாலை ஆசிரியர், ஆசிரியைகளின் பிரமாண்ட பேரணி நடந்தது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முருக செல்வராஜன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் அபிஜித் முகர்ஜி தொடங்கி வைத்தார். பேரணியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பேரணியில் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம், உருமி மேளத்துடன் தேவராட்டம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பேரணியால் போக்குவரத்து 1 மணி நேரம் தடைபட்டது. டி.எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நிறைவில் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்பு குழுவின் மூத்த துணைத் தலைவரும் முன்ன

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2012 - HALL TICKETS.

Click here...

அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் -தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 299 நாள். 19.05.2012அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்நியமனத்திற்கான பணிகள் தீவரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு முதற்கட்டமாக 11432 பணியிடங்களுக்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் :-* பெண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம்.* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.* அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள் 25 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.* உதவியாளர்கள் நியமனத்திற்கு 25 - 35 வயதிற்குள் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.* .அங்கன்வாடி பணியாளர் பணிக்குரூ.2500-5000 + தர ஊதியம் ரூ.500/- என்ற விகிதத்திலும், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு ரூ.1800-3300 + தர ஊதியம் ரூ.400/- என்ற விகிதத்திலும்,உதவியாளர் பணிக்கு ரூ.1300-3000+ தர ஊதியம் ரூ.300/- என்ற விகிதத்திலும் உரிய படிகளுடன் வழங்கப்படும்.* விண்ணப்பம் வழங்கும் நாள், விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி நேர்முகத் தேர்

நீதிமன்ற தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் மீது சிறப்புகவனம் செலுத்தி செயல்பட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தமிழகத்தில் அண்மையில் புதியதாக தொடக்கக் கல்வி இயக்குனராக பதவி ஏற்ற திரு. இராமேஸ்வரன் முருகன் அவர்கள் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் அதில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொடக்கக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை, தேர்ந்தோர் பட்டியல் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை தன்னுடைய தலைமையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் உடனுக்குடன் முடித்து வைக்கிறார் என்றும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளாதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் நீதிமன்ற தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் மீது சிறப்புகவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மீது தனிகவனம் செலுத்தி உடனுக்குடன் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் ஈரோட்டில் நடந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் முன்னுரிமைபட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

முன்னுரிமை பட்டியல், பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் அனைத்து ஒன்றியங்களிலும் சரியாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும்,தயாரிக்கப்பட்ட பட்டியல்களை ஒன்றியம் மாற்றி சரிப்பார்க்கப்பட்டு, சரியாக உள்ளதா என ஆய்வு செய்த பிறகு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்று இயக்ககத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,தொடக்கக் கல்வித் துறையை சார்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகஈரோட்டில் நடந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளதாக கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலவச கட்டாய கல்வி - அரசின்நடவடிக்கை குறித்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, நலிந்த பிரிவினருக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இடம் அளிப்பது தொடர்பாக, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அயப்பாக்கம் வேலம்மாள் பள்ளி, சின்மயா நகர் வித்யாலயா பள்ளி, மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேஷன் வித்யாலயா, ஆதம்பாக்கம் டி.ஏ.வி., ஆகிய நான்கு பள்ளிகளுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில், பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.அனுமதி இல்லை:இந்த மனுக்களில், அயப்பாக்கத்தை சேர்ந்த சேதுவராயர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2009ம் ஆண்டு, கட்டாய இலவசக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், நலிந்த பிரிவினருக்கு, அருகில் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அதன்படி, என் மகள் சுவாதியை, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பித்தேன். ஆனால், பள்ளியில் சேருவதற்கான அனுமதியை பள்ளி வழங்கவில்லை. பள்ளியின் சேர்க்கையும் முடிந்தது. மேலும், இது சம்பந்தமாக, பள்ளி நிர்வாகம் மற்றும் அரசிடம், கோரிக்கை மனு ஒன்றையும் அளித்த

மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவது கட்டாயம்.

மருத்துவ மாணவர்கள், கிராமப்புறங்களில், ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்கூறியுள்ளார்.இதுதொடர்பாக, மக்களவையில் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினால், அவர்கள் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேர 50% இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றினால் 10 மதிப்பெண்களும், பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினால் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.ஆனால், இவ்வளவு சலுகைகளை அறிவித்தாலும்கூட, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வரவில்லை. எனவேதான், கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் நிலை வந்துள்ளது.இந்தியாவில் படித்துவிட்டு பணியாற்றும் மருத்துவர்களின் பதிவு விபரங்கள் மத்திய அரசுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதன்பொருட்டு, படிப்பு முடிந்து பணியை ஆரம்பிக்கும் மருத்துவர்கள், தங்களைப் பதிவுசெய்து கொள்ளும் நடைமுறை ஒழுங்கமைவு செய்யப்படும்.சில மருத்துவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பதிவுசெய்து கொள்வதாலும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்று விடுவதாலும், துல்லியமா

பள்ளி தொடக்க நாளிலேயே புத்தகம்!

Image
தொடக்கக்கல்வி (வகுப்பு 1-8) - இலவச பாடநூல்கள் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 22.05.2012 க்குள் பள்ளியில் பெற்று 01.06.2012 அன்றே மாணவர்களுக்கு வழங்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு .

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க மேலும் 6 நாள்கள் நீட்டிப்பு.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் ஜூன் 6ம் தேதி வரை பெறப்படும் என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ளை சமர்பிக்க வரும் 31ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 6 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காலிப் பணியிட விபரங்கள் சேகரிப்பு.

தமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்களை உடனடியாக வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் பாட வாரியாக ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப முடியாததால் அந்த இடங்களில் அருகில் உள்ள பள்ளிஆசிரியர்களை மாற்றம் செய்து பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்த கல்வியாண்டில் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடனே வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு

திட்டமிட்டபடி ஜூன் 3-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பேட்டி.

டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில்,எவ்வித மாற்றமும் கிடையாது" என,டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு(டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.எனவே, ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும்; இதில், எவ்வித மாற்றமும் கிடையாது. ஆறுலட்சத்து 56 ஆயிரத்து 54 பேர், தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு, "ஹால் டிக்கெட்" தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், அனைத்து தேர்வர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படும்; இணையதளத்திலும் வெளியிடப்படும்.வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்" கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை வைத்தே, தேர்விலும் பங்கேற்கலாம்.முதுகலை தேர்வு:வரும் 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்கிறது. இதே நாள

TET மற்றும் TRB PG தேர்வுதேதியில் மாற்றமில்லை : ஜூன் 3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TETமற்றும்TRB PGதேர்வுதேதியில்மாற்றமில்லை : ஜூன்3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி.தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர்தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும்திட்டமிட்டப்படியேமே27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மே 20முதல் இணையதளம் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடக்கக்கல்வி - இலவச பாடநூல்கள் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 008014 / கே 3 / 2012, நாள்.17.05.2012.அனைத்து மாவட்ட புத்தக மையங்களில் இருந்து 1 முதல் 8 வரை வகுப்புகளுக்கான பாடநூல்களை பெற்று உடனடியாக தலைமையாசிரியர்களுக்கு வழங்கிபள்ளிகளில் தயார்நிலையில் வைத்திருந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும்.அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன்னர் 22.05.2012க்குள் வழங்கப்பட்டு பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்க தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,பள்ளி திறக்கும் நாளான 01.06.2012 அன்று அனைத்து மாணவ / மாணவிகளுக்கும் தவறாது பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார

1.1.2011 முன்னுரிமைப் பட்டியலிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசாணை எண். 15 பள்ளிக்களிவித்துறை நாள். 23.1.2012-ன் படி உருவாக்கப்பட்ட1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 4 மாதங்கள் ஆகியும் பதவி உயர்வு அளிக்கப்படாத சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து 17 இடைநிலை ஆசிரியர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில் தற்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் அளித்த மனுக்களை பரிசீலனை செய்து பதை உயர்வு வழங்கி உரிய உத்தரவு 8 வாரத்திற்குள் பிறப்பிக்க தொடக்கக்கல்வ்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சற்று நிம்மதிஅடைந்துள்ளனர்.

TNPSC Group1 result published.

Click here

முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் அதிரடி மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள், பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை11.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.1. சங்க காலத்தில் தலைசிறந்து விளங்கிய சோழ மன்னர் - கரிகாலன்2. வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் - பாண்டியர்கள்3. நீர் வழி போக்குவரத்துக்கு உதவுவது - பரிசல்4. கடல் பயணம் செய்வோர் எளிதில் திசை அறிய உதவுவது - திசைக் காட்டும் கருவி5. பள்ளி ஒரு - குடும்பம்6. மதுரையில் கடைச் சங்கம் ஏற்படுத்தியவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்7. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்8. பாண்டியனின் துறைமுகம் - கொற்கை9. தலையாலங்கானத்துச் செகுவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் நெடுஞ்செழியன்10. சங்க காலத்தில் தலைசிறந்து விளங்கிய சோழ மன்னன் - கரிகாலன்11. பொருநராற்றுப் படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியர்12. இந்தியாவில் முதல் விண்வெளிவீராங்கனை - கல்பனா சாவ்லா13. முதன் முதலில் விண்வெளிக்குமனிதனை அனுப்பிய

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் பி.எட். விண்ணப்பிக்க...

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட், படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 4 ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பி.எட், படிப்பில் 1000 இடங்களுக்கு (500 தமிழ்வழி, 500 ஆங்கிலவழி) ஜூலை 27 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பல்கலைக்கழகத்தின் கீழ்க்கண்ட11 ஒருங்கிணைப்பு மையங்களில் பி.எட், விண்ணப்பம் கிடைக்கும். அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரி- சென்னை, எஸ்.என்.ஆர் கல்லூரி- கோவை, எஸ்.டி.ஹிந்து கல்லூரி- நாகர்கோவில், மதுரை சமூக அறிவியல் கல்வி நிறுவனம்- மதுரை, சேதுபதி அரசு கலைக் கல்லூரி-இராமநாதபுரம், சோனா தொழில் நுட்ப கல்லூரி- சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போசு கல்லூரி-திருவாரூர், புனித ஜான் கல்லூரி- பாளையங்கோட்டை, தேசியக் கல்லூரி- திருச்சி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி-வேலூர் மற்றும் அறிஞர்அண்ணா அரசு கலைக் கல்லூரி- விழுப்புரம்.மேலும் கீழ்கண்ட பி.எட்., கல்வி மையங்களிலும் பி.எட்., விண்ணப்பம் கிடைக்கும்.ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி-சென்னை, புனித கிறிஸ்டோப்பர் கல்வியியல் கல்ல

11, 12ம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான உதவித் தொகை.

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 11, 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஜுலை 29ம் தேதி நடைபெற உள்ளது.இத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.20,000 முதல் 25,000 வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த உதவித் தொகை பெற அபராதம் இல்லாமல் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்துவிட்ட நிலையில், ஜுன் 15ம் தேதி வரை ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஜுலை 15ம் தேதி வரை ரூ.200 அபராதம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இயற்பியல், வேதியியல், கணிதம்/உயிரியியல், ஆங்கிலும் ஆகியப் பாடப்பிரிவுகளில் இருந்து 200 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு 2 மணி நேரம் வழங்கப்படும்.மேலும் தகவல்களை அறிந்து கொள்ள www.nest.net.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

TET - 2012 தேர்வில் வெற்றிபெற நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது.

தமிழக அரசு நடத்தும் 2012ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்விற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இந்த நேரத்தில், நீங்கள், குறைந்தபட்சம்அடிப்படை தயார்படுத்தலையாவது முடித்திருக்க வேண்டும்(அதாவது தேர்வுக்குப் படித்தல்).இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், அதற்கான உத்தரவாதத்தை பெறுவது எப்படி என்பதை அறிதல் வேண்டும். தேர்வுக்கான கேள்வித்தாள் எவ்வாறு இருக்கும்? என்னால், 150 கேள்விகளுக்கு வெறும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியுமா?Multiple choice கேள்விகள் தேர்வுகளுக்காக நான் பயிற்சி எடுக்க வேண்டுமா?மாதிரி பேப்பர்களைக் கொண்டு வீட்டில் பயிற்சி செய்தால், நிஜ தேர்வுக்கான சரியான பயிற்சியை என்னால் பெற முடியுமா? நான் பலவீனமாக இருக்கக்கூடிய அல்லது நன்றாக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? என்னுடைய புலமையை அளவிடுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.தேர்வு எழுதுவதற்கான தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நீங்கள் எளிதாகப் பெற வேண்டுமெனில், அதற்குமாதிரி தேர்வே(model or mock test) ஒருசிறந்த வழியாகும். இதுபோன்ற

விடுமுறை நாட்களிலும் விண்ணப்ப விற்பனை உண்டு!

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம், விடுமுறை நாட்களிலும் வழங்கப்பட இருப்பதால், வேலை நாட்களில், காலை முதல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.குடும்பத்துடன் வருகை:எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதிவரை வழங்கப்பட உள்ளன. முதல் நாளான, மே 15ம் தேதி மட்டுமே, தமிழகம் முழுவதும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.மருத்துவப் படிப்பில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், முதல் நாளே விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என்ற ஆசையில், காலை 6 மணி முதலே காத்துக் கிடந்ததால்,வரிசை நீண்டு கொண்டே போனது. மருத்துவப் படிப்பு விண்ணப்பம் வாங்க வருபவர்களில் பலர், குடும்பத்துடன் வருவதை, வழக்கமாக கொண்டுள்ளனர்.விடுமுறை நாட்களிலும்...:இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை, விண்ணப்பம் வழங்கப்படுகிறது.இதுதவிர, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுவதால், நீண்ட நேரம் வர

மருத்துவ படிப்புகளுக்கானஇடங்களை 2 மடங்கு அதிகரிக்க திட்டம்!

நாட்டில் நிலவும் மருத்துவர்:நோயாளி விகிதாச்சாரத்தை குறைக்க, மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.வரும் 2021ம் ஆண்டில், MBBS இடங்களை 80,000 என்ற அளவிலும், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களை 45,000 என்ற அளவிலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது 1:2000 என்ற அளவில் உள்ள மருத்துவர் நோயாளி விகிதாச்சாரத்தை, 1:1000 என்ற அளவில் மாற்றியமைக்க முடியும்.MBBS படிப்பில் 38,431 இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 22,806 இடங்களையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான நாடாளுமன்ற கன்சல்டேடிவ் கமிட்டி கூட்டத்தில், இத்தகவலை,அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போதைய நிலையில், நாடெங்கிலுமுள்ள 335 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 41,569 MBBS இடங்களும்,22,194 முதுநிலை மருத்துவ இடங்களும் உள்ளன. இத்தகைய இடங்களில் அதிகமானவை, தென் மற்றும் மேற்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கே செல்கின்றன.ஏனெனில், 335 மருத்துவக் கல்லூரிகளில் 66% கல்லூரிகளும், தற்போதைய MBBS இடங்களில் 69% இடங்களும், தமிழக

ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமா?

சமுதாயத்தில் ஆசிரியர்களின் பங்கும், பணியும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியது என்பதில் ஐயமே இல்லை. ஒரு தலைமுறையை உருவாக்கும் தெய்வப் பணி; அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று அன்று முதல் அழைக்கப்படுகின்றனர். வணக்கத்துக்குரிய ஆசிரியர்களைவரலாறு மறப்பதில்லை. ஓராண்டுக்குத் திட்டமிட வேண்டுமா? பயிர் செய்; பத்தாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மரங்களை நடு; நூறாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மனிதர்களை உருவாக்கு; இது சீனப் பழமொழி. மனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள் ஆசிரியர்களே!இந்த ஆசிரியர்கள் தகுதி மிக்கவர்களாக இருப்பது அவசியம்தான்; தகுதியும், திறமையும், பண்பாடும், ஒழுக்கமும் உள்ள ஆசிரியர்களே தகுதியும், திறமையும், பண்பாடும், ஒழுக்கமும் உள்ள மாணவர்களை உருவாக்க முடியும்; பயிர்கள் செழித்து வளர்வதற்கு நிலவளமும், நீர்வளமும் வேண்டும்; உரம் இடுவது உயர் விளைச்சலுக்கு உதவும். வரும் ஜூன் 3 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்க

பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தியுள்ள நிலையில், பள்ளிவாரியாக உபரி ஆசிரியர், காலியிடங்கள் தொடர் பான விபரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆண்டு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்க கல்வித் துறை இயக்குனரால் அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்களும் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.இந்நிலையில் கல்வித் துறை சார்பில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வகுப்புகள் வாரியாக ஆசிரியர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர், ஆசிரியர் எண

செயல் வழிக் கற்றல் (ABL) பயிற்சி

புதிய  எளிமைபடுதப்பட்ட செயல் வழிக் கற்றல் அட்டைகளை அமல்படுத்த  ஆசிரிய பயிற்றுனார்கள் , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு முதல் கட்டமாக 15 மாவட்டங்களுக்கு  23.5.12 மற்றும் 24.5.12 பயிற்சிஅளிக்கப்படுகிறது.  மேலும் விரிவாக அறிய : இங்கே கிளிக் செய்து திட்ட இயக்குனரின் செயல்முறைகளை டவுன்லோட் செய்து படியுங்க

Latest Text Books (revised in 2012) for the Classes : 1 to 10& +1, +2 & D.T.Ed

CLICK HERE

பி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு சேர்க்கை: மே 21 முதல் விண்ணப்பம்

வரும் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேர்வதற்கு மே 21-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்,தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்காக இந்த விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன.பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் என தமிழ்நாடு முழுவதும் 34 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 300.இந்தத் தொகையை 'The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions 2012, Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi - 630004' என்ற பெயரில் காரைக்குடியில் செல்லத்தக்க டி.டி.யாக எடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.தாழ்த்தப்பட்ட, பழங்குடி, அருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகலை ஒப்படைத்து விண்

பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் அக்டோபருக்குள் லேப்-டா

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் அக்டோபருக்குள் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்டமாவட்டங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இதுவரை 62 ஆயிரம் லேப்-டாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் மூலமாகவே இந்த லேப்-டாப் விநியோகம் நடைபெற்றுவருகிறது.பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் லேப்-டாப் வழங்கப்பட்டதற்கான முத்திரை இடப்படும் எனத் தெரிகிறது. லேப்-டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு அதற்கான முத்திரையும் மதிப்பெண் சான்றிதழிலேயே இடப்படும் எனத் தெரிகிறது. பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், இந்த முத்திரையைக் காண்பித்து லேப்-டாப்புகள் தயாரான பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு இலவசலேப்-டாப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.லேப்-டாப்புகளை க

அரசானை 23 செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குனர் ஆணை

தொடக்கக்  கல்வித்துறை  சார்ந்த இடைநிலை, பட்டதாரி மற்றும்  தலைமை   ஆசிரியர்கள் ஆகியோருக்கு அரசானை 23 செயல்படுத்தி தர ஊதியம், தனி ஊதியம் மற்றும் சிறப்பு படி வழங்க இயக்குனர் ஆணை . இங்கே கிளிக் செய்து ஆணையை  டவுன்லோட் செய்யுங்கள். ( GO& Proceeding avail at the bottom of GO,

கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக துணைக்குழு அமைக்கப்படும்: அமைச்சர்

கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் கீழ், துணைக் குழுவை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இக்குழு, விரைவில்அமைக்கப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.வல்லுனர் குழு:பள்ளிகளில், தற்போது கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிந்து, கல்வித் தரத்தை மேம்படுத்த, அமைச்சர் தலைமையில் ஏற்கனவே ஒரு வல்லுனர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.இதில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, மாநில திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி, சென்னை பல்கலை, கல்வியியல் துறைமுன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், சி.பி.எஸ்.இ., முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன் உட்பட, ஒன்பது பேர் இடம்பெற்று உள்ளனர்.கூட்டத்தில் முடிவு:இக்குழுவின் முதல் கூட்டம், அமைச்சர் தலைமையில், 11ம் தேதி சென்னையில் நடந்தது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான கல்வித்திட்ட முறையில் உள்ள குறைகளை கண்டறிதல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மேலும், வல்லுனர் குழுவின் கீழ், ஒரு துணைக் குழுவை அமைத்து, அதில் கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பணிபுரியும் ஆச

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை9.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.1. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்6. இபின் பதூதவின் நாடு - மொராக்கோ7. தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை8. Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி9. ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர்10. கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய்11. உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்12. விண்வெளிக்குச் சென்ற முதல்விலங்கு - நாய்13. விண்வெளிக்குச் சென்ற முதல்நாயின் பெயர் - ல

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை10.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 1. ISRO - Indian Space Research Organization2. NASA - National Aeronauntics and Space Administration3. சட்டங்கள் வகுக்கக் காரணம் - பொது நன்மைக்கே4. இந்தியா அரசியலமைப்பு - உலகிலேயே மிகவும் பெரிதானது5. இந்தியா அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 19506. இந்தியாவின் குடியரசு நாள் - ஜனவரி 26, 19507. இந்தியா ஒரு - இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு8. இந்தியாவில் வாக்களிக்கும் வயது - 189. மக்கள் நலம் காப்பதில் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பது - வழிகாட்டும் நெறிமுறைகள்10. மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் - 54511. மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள் - 25012. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 1213. மாநிலங்களவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது - 3014. மாநிலங்களவை உறுப

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு

தொடக்கக்கல்வி/ பள்ளிகல்வி துறையில் -ஆங்கில வழி வகுப்புகள்- அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் துறை சார்ந்த இயக்குனர்களால் கோரப்பட்டுள்ளது .தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு10பள்ளிகள் வீதம் 320பள்ளிகளில்2012 - 2013ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப்பள்ளிகளில் சுமார்160பள்ளிகளில்1முதல்8ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாக ஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனவே முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும்5பள்ளிகளில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில்1ஆம் வகுப்பு மட்டும் இரண்டு ஆங்கில வழி இணைப்பிரிவுகள்2012 -13ஆம் ஆண்டில் தொடங்க அனுமதி வழங்கிட ஏதுவாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களது மாவட்ட அளவில்

அங்கன்வாடி தரம் உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 5000 அங்கன்வாடி மையங்களும் புகையில்லா மையங்களாக மேம்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தலா 2 வண்ண ஆடைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், முதல் கட்டமாக சென்னை,தேனி, திருச்சி, திண்டுக்கல், வேலூரில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கான ஆடைகள் 2ல் இருந்து 4ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

23 ஆயிரத்து 128 பேர் விரிவுரையாளர் தேர்வில் பங்கேற்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, 154 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்தில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக உள்ள, 154 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இப்பணியிடங்களுக்கான, தேர்வு,தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் நேற்று நடந்தது.இதற்கு, 26,328 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், உரிய சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் இல்லாத, 12 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள,26,316 பேருக்கு, ஹால் டிக்கெட்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியது.இவர்களுக்கான தேர்வு, சென்னையில் ஏழு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும் 67 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் ஒரு மணி வரை 23,128 பேர்தேர்வு எழுதினர். தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 3,188 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

01.01.2012 முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க உத்தரவு

தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான2012 - 2013ஆம் ஆண்டு01.06.2012அன்று ஏற்படும் உத்தேச காலிப்பணியிடங்களுக்கு01.01.2012தேதியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டமுன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்திற்கு வரும் போது கடந்த ஆண்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் ஒப்புதல் அளித்த (01.01.2011)முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் தவறாது கொண்டு வரதொடக்கக்கல்வி இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.மேற்கூறிய ஆய்வு கூட்டம் கீழ்காணும் பட்டியலின்படி நடைபெறவுள்ளது.இடம் நாள் மாவட்டங்கள்காஞ்சிபுரம் - 17.05.2012 (காஞ்சிபுரம்,விழுப்புரம்,திருவள்ளூர் )திருச்சி - 18.05.2012 (திருச்சி,அரியலூர்,கரூர்,பெரம்பலூர் )தஞ்சாவூர் - 18.05.2012 (தஞ்சாவூர்,நாகை,புதுகோட்டை,திருவாரூர் )ஈரோடு - 19.05.2012 (ஈரோடு,திருப்பூர்,கோவை, நீலகிரி )சேலம் - 21.05.201

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம்.

மாநில பொதுச் செயலாளர் பங்கேற்று, மாநில செயற்குழு முடிவுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், மே 17, 18, 19 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நடக்க உள்ள அகில இந்திய மாநாடு, பேரணி ஆகியவற்றில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 500 ஆசிரியர்கள் பங்கேற்பது. 100 பிரதிநிதிகள் கறுப்பு, வெள்ளை சீருடையில் இயக்ககொடி ஏந்தி பங்கேற்பர்.வெண்ணந்தூர் வட்டாரத்தில், 16 ஆசிரியர்களுக்கு மட்டும் தனி ஊதியம் வழங்க அனுமதி மறுக்கும் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. ராசிபுரம், புதுச்சத்திரம் ஒன்றிய ஆசிரியர்களுக்கு விரைந்து தனி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடக்கக்கல்வி -ஆங்கில வழிவகுப்புகள்- அரசு / ஊராட்சிஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொருமாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம் 320 பள்ளிகளில் 2012 - 2013 ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 160 பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாகஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.எனவே முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பள்ளிகளில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மட்டும் இரண்டு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் 2012 -13 ஆம் ஆண்டில் தொடங்க அனுமதி வழங்கிட ஏதுவாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களது மாவட்ட அளவில், ஊரகப் பகுதியில் இயங்கும் 10 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளை தெரிவு செய்து, அப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் தொடங்க ஏதுவாக அனைத்து விதத்திலும் ஆய்வு செய்து அப்பள்ளிகளின் விவரப்பட்டி

உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகும்.

தொடக்க கல்வித்துறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 34 உதவி தொடக்கக்கல்வி அதிகாரி (ஏ.இ.இ.ஓ.)பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. பி.ஏ. பி.எட். அல்லது பி.எஸ்சி. பி.எட். கல்வித்தகுதி கொண்ட இந்த பதவிக்கு 68,536 பேர் விண்ணப்பித்தார்கள்.அவர்களில் 1,588 பேரின் விண்ணப்பங்கள் குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டன. 66,948 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஏ.இ.இ.ஓ தேர்வுக்கான விடைத்தாள்கள் கம்ப்ïட்டரில் மதிப்பீடு செய்யப்பட்டு, இதர அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை நம் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிக்கல்வித்துறையில் மூன்று இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசுஉத்தரவு.

பள்ளிக் கல்வித் துறையில், ராமேஸ்வர முருகன் உட்பட மூன்று இணை இயக்குனர், இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை - இடைநிலைக் கல்வி, இணை இயக்குனராக இருந்த ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனராகவும், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் - தொழிற்கல்வி, மோகன்ராஜ், முறைசாரா கல்வி இயக்குனராகவும், நூலகத் துறை இணை இயக்குனர் பிச்சை, பாடநூல் கழக செயலராகவும் - இயக்குனர் நிலை, பதவி உயர்வு பெற்றுள்ளனர்.மேலும்,தொடக்கக்கல்வி இயக்குனர் சங்கர், ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனராகவும், நூலகத் துறை இயக்குனர் அன்பழகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும் - இயக்குனர் நிலை, பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளனர். நூலகத் துறை இயக்குனராக அன்பழகன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "நூலகத் துறை இயக்குனர் பதவியில் நியமிப்பதற்கு உரிய தகுதி அன்பழகனுக்கு இல்லை. எனவே அவரதுநியமனம் செல்லாது' என, கடந்த மாதம், ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நூலகத் துறை இயக்குனராக, தகுதி வாய்ந்தவர் விரைவில் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. &quo

01.01.2012 முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 12.05.2012.தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான2012 - 2013 ஆம் ஆண்டு 01.06.2012 அன்று ஏற்படும் உத்தேச காலிப்பணியிடங்களுக்கு 01.01.2012 தேதியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.இக்கூட்டத்திற்கு வரும் போது கடந்த ஆண்டுமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் ஒப்புதல் அளித்த (01.01.2011)முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் தவறாது கொண்டு வரவும்.மேற்கூறிய ஆய்வு கூட்டம் கீழ்காணும் பட்டியலின்படி நடைபெறவுள்ளது.இடம்நாள்மாவட்டங்கள்காஞ்சிபுரம் - 17.05.2012 ( காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் )திருச்சி - 18.05.2012 ( திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர் )தஞ்சாவூர் - 18.05.2012 ( தஞ்சாவூர், நாகை, புதுகோட்டை, திருவாரூர் )ஈரோடு - 19.05.2012 ( ஈரோடு, திருப்பூர், கோவை

2012- 2013 கல்வியாண்டில் 500 ஆசிரிய பயிற்றுனர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் - இணை இயக்குனர் ஆணை

CLICK HERE AND DOWNLOADTHE JOINT DIRECTOR PROCEEDING

ஜுன் 4ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியமாணவ, மாணவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தேர்வுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவை அறிவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை திணமணி.காம்வெளியிட உள்ளது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முழுமையானகற்பிப்பு, சிறப்பு கட்டணங்கள்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம், முழுமையாக அரசால் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், அமைச்சர் முகமது ஜான் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் மட்டும் முழுமையாக அரசால் வழங்கப்படுகிறது.கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் வழங்கப்படுவதில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்குவதைப்போல, 75 ஆயிரம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபின மாணவ, மணவியருக்கும் கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் முழுமையாக, 16.44 கோடி செலவில் வழங்கப்படும்.பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் 1,000 இடங்களை பெறும், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவர்களுக்கு, அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு, 3,000 ரூ

பொறியியல் விண்ணப்ப விற்பனை மையங்கள் எவை எவை?

மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொறியியல் கவுன்சிலிங் சீசன் துவங்கிவிட்டது. மே 11ம் தேதி தொடங்கி, 31ம் தேதி வரை, விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும், பல்வேறான ஊர்களிலுள்ள குறிப்பிட்ட மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.அந்த ஊர்கள் மற்றும் மையங்களின் விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.AriyalurAnna University of Technology Tiruchirappalli –Ariyalur Campus, Ariyalur – 621 713PudukkottaiGovt. Arts College for Women,Pudukkottai – 622 001Government Polytechnic,Aranthangi – 614 616ChennaiCentre for Entrance Examinations& Admissions,Anna University, Chennai – 600 025Madras Institute of Technology,Chrompet, Chennai – 600 044Bharathi Govt. Women’s College (Autonomous),Broadway, Chennai – 600 108Government Polytechnic,Purasaiwakkam, Chennai – 600 012RamanathapuramGovernment Arts College for Women,Ramanathapuram – 623 501SalemGovernment College of Engineering,Salem – 636 011Government Arts College for Women,Salem – 636 008Arignar Anna Government Arts College,Athu

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை பெற நடவடிக்கை-

பொதுத்தேர்வு எழுதி முடித்துள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், தேர்வு முடிவுகளுக்குப்பின், அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கல்வி அதிகாரி பணி: பள்ளிக் கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத் துறை, ஐ.டி., துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.இதற்காக, மாணவர்களின் முழுமையான விவரங்களை திரட்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்காக, போதிய விவரங்கள் ஏற்கனவே திரட்டப்பட்டு இருப்பதால், வேலை வாய்ப்பு பதிவிற்கான கூடுதல் தகவல்களை மட்டும் பெறும் பணிகளில், மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ஆய்வு கூட்டம்: இப்பணிகள் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில்நடந்தது. பள்ளிக் கல்வித்துறைசெயலர் சபீதா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயலர் மோகன் பியாரே, ஐ.டி., துறை செயலர் பிரபாகர் மற்றும்மூன்று துறைகள் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.ம

தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில், புதுச்சேரி மாநிலத்தவரும் பங்கேற்கலாம்

தமிழக அரசு நடத்தும் ஆசிரியர்தகுதி தேர்வில் புதுச்சேரி மாநில டி.டி.எட்., பி.எட்., ஆசிரியர்கள் பங்கு பெறலாம் எனகல்வி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களாகநியமிக்கப்படுவர்கள் அந்தந்தமாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என விதியை வகுத்துள்ளது.இதன்படி, புதுச்சேரி அரசு, தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை புதுச்சேரி அரசுப்பணிக்கு தகுதியானதாக அங்கீகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் பட்டயப் பயிற்சி (டி.டி.எட்) மற்றும் இளங்கல்வி (பி.எட்.,) பட்டம் பெற்றவர்களையும் இத்தேர்வுக்கு அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஜூன் 3ம் தேதி நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் இத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும

DTERT - BRITISH COUNCIL - ENGLISH TRAINING - PARTICIPATING LIST

மாநில கல்வியியல்  ஆராய்ச்சிமற்றும் பயிற்சிநிறுவனத்தின் சார்பில் "BRITISH COUNCIL" 5 நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில்  ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.பயிற்சி நடைபெறும் இடம் : செயின்ட் தியோடர் ரிடிரிட் சென்டர்,  வெலிங்டன், குன்னூர்.பயிற்சி நடைபெறும் நாள் : 12.03.2012 முதல் 16.03.2012 பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய...

DTERT - CCE - உயர் தொடக்க நிலை - அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனஇயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். .05.2012தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை உயர் தொடக்க நிலையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் முடிவெடுத்துள்ளது மற்றும் இது சார்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்களான முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பயிற்சி நடைபெறும் இடம் : SIEMAT CONFERENCE HALL, CHENNAI - 06.பயிற்சி நடைபெறும் நாள் : 16.05.2012.

1592 பள்ளிசெல்லா குழந்தைகளுக்கு இணைப்பு பள்ளிகள் மூலம் பயிற்சி.

ஆயிரத்து 592 பள்ளிசெல்லா குழந்தைகளுக்கு இணைப்பு பள்ளிகள் மூலம் பயிற்சி அளித்து முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளதாக ஆட்சியர் அஜய் யாதவ் தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாதாந்திர மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியது: 14 வயதுக்குள்பட்ட பள்ளிசெல்லாக்குழந்தைகள் மொத்தம் 1592 பேர் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் இணைப்பு பள்ளிகள் மூலம் பயிற்சி அளித்து முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர். நடப்பு கல்வியாண்டில் நிலுவையிலுள்ள கட்டடப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், வகுப்பறைகளுக்கு டைல்ஸ் பதித்தல் ஆகிய பணிகளை அனைத்து பள்ளிகளிலும் நிறைவேற்றவேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பொன். குமார், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் சு.மதி, குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் மு.ராஜபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன், மா

Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st January, 2012 - Orders - Issued.

To Download G.O.No.145, FINANCE (ALLOWANCES) DEPARTMENT Dated 30th April 2012 Click Here...

சிறப்பு நடுநிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்: தமிழக அரசு.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் படிப்பதற்காக சிறப்பு நடுநிலைப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தெரிவித்தார். இந்த பள்ளிகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்பட உள்ளதாக அவர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்தேதி விபரங்கள் அறிவுப்பு

பொறியியல் கவுன்சிலிங் நடைமுறைகளுக்கான தேதி விபரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.* மே 11ம் தேதி விண்ணப்ப விநியோகம் துவங்குகிறது.* மே 31ம் தேதி விண்ணப்ப விநியோகம் நிறைவடைகிறது. அதே தேதிக்குள்ளேயே, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட வேண்டும்.* ஜுன் 20ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.* ஜுன் 24ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.* ஜுலை 1ம் தேதி, விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.* ஜுலை 3 - 7, தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்(phase 1) நடைபெறும்.* ஜுலை 8ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.* ஜுலை 9 - ஆகஸ்ட் 12, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

ஆசிரியர்கள் போன்று விடுதிகாவலர்களையும் கல்வி ஆண்டு இறுதி வரை பணி நீட்டிப்பு செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் உத்தரவு.

10.05.2012 அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மான்ய கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளின் போதுவிடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் போது பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப் படுவதைப் போன்று அந்த கல்வி ஆண்டு நிறைவடையும் வரை பணி நீட்டிப்புவழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 011248 / அ 1/ 2012, நாள். 09.05.2012அனைத்து மாவட் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 15.05.2012 அன்று ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு இயக்குனர்உத்தரவிட்டுள்ளார்.பயிற்சி நடைபெறும் : SIEMAT, Conference Hall, SCERT, Chennai - 600 006

செயல்திறன் குறைந்த குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி!

செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் கட்டாய கல்வி சட்டத்தில் கொண்டு வரும் வகையிலான சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.குழந்தைகளுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி கற்றுத்தரும் வகையில், கல்வி அடிப்படை உரிமை சட்ட மசோதா, ராஜ்யசபாவில் கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலே, காங்கிரஸ் எம்.பி., பிரியா தத் போன்றோர், "குறிப்பிட்ட சிலநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை,பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. குறிப்பாக, செயல் திறன் குறைந்தகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்கி, வீடுகளிலேயே, கல்வி கற்றுத் தருகின்றனர்.இதனால், அந்த குழந்தைகள் தனிமை சூழலில் வசிக்கின்றனர். அவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கும் வகையில், கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டத்தில், செயல் திறன் குறைந்த குழந்தைகளையும் சேர்க்க வேண்டும்" என, வலியுறுத்தினர்.இதைத் தொடர்ந்து, செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையிலான, கல்வி அடிப்படை உரிமைசட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முறைகேட்டை கண்காணிக்க மொபைல் ஜாமர் கருவிகள்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின்கீழ் இயங்கும், அனைத்து அரசு மற்றும்தனியார் கல்லூரிகளின் தேர்வு மையங்களில், மொபைல் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என, பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறினார்.சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆரிப் முகமது. இவர், உள்ளிட்ட 10 மாணவர்கள், கடந்த பிப்ரவரியில் நடந்த எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு எழுத்துத்தேர்வில், ப்ளூ டூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மொபைல்போன் மூலம் காப்பி அடித்ததாக புகார் எழுந்தது. இதற்கு நம்பும்படியான ஆதாரங்கள் கிடைத்ததால், இவர்களின் தேர்வு முடிவை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.இதுதொடர்பாக, ஆரிப் முகமது சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் மீது பல்கலை நிர்வாகம், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது. போலீசாரின் விசாரணை அறிக்கை ஒரு வாரத்திற்குள் பெறப்படும் என தெரிகிறது.இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறியதாவது: சைபர் கிரைம் போலீசாரின் அறிக்கை வந்ததும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, தேர்வு ஒழுங்குமுறை குழுவின் மூலம் உரிய

பொதுப் பாடத்திட்டமாக பெயர் மாறிய சமச்சீர் பாடத்திட்டம்!

சமச்சீர் பாடத்திட்டம் என்ற பெயரை, பொது பாடத்திட்டம் என மாற்றி, முப்பருவத் தேர்வு முறையிலான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு, தவறுகள் இருந்த பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து, 2011-12 கல்வியாண்டில் சமச்சீர் பாடத்திட்ட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியது."மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில், 2012-13ம் கல்வியாண்டு முதல், முப்பருவத் தேர்வு முறை கொண்டுவரப்படும்,&'&' என முதல்வர் அறிவித்தார். தேர்வு முடிந்து புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், முப்பருவத் தேர்வு முறையில் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. சமச்சீர் புத்தகத்தில் ஏற்கனவே"ஸ்டிக்கர்" ஒட்டி மறைத்த பிழைகள் அனைத்தும் திருத்தப்பட்டன.கடந்த கல்வியாண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தக முன்பக்க அட்டையில், "சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நூல்"

இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 தர ஊதியம் 3 ஆண்டு கோரிக்கைக்கு முடிவு வருமா?

Click here

தொடக்கக் கல்வி - ஆசிரியர் பணியிடங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

அரசாணை  எண். 102 பள்ளிக்கல்வித் துறை நாள்.20.04.2012ஆசிரியர் பணியிடங்கள் இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகிய 4526 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2012 முதல் 31.12.2014 வரை 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இப்பணியிடங்களில் பணிபுரியும்ஆசிரியர்கள் அவரவர்கள் பதவிகேற்ப ஏற்ற முறையில் ஊதியம், அகவிலைப்படி மற்றும் இதர படிகள் பெற தகுதியுடையவராவர்கள்.

கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்.

கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் பதிவிறக்கம் செய்ய.

B.Ed./M.Ed. Degree Examination, May/June 2012 - Time Table

B.Ed./M.Ed. Degree Examination, May/June 2012 - Time Table click here forB.Ed./M.Ed. Degree Examination, May/June 2012 - Time Table click here for University Question Paper May/Dec 2011& May/Dec2010 Examinations

சாதி, வருமான, இருப்பிட சான்றுகளை 6ம் வகுப்பிலேயே பெறலாம்!

எதிர்கால சிரமங்களைத் தவிர்க்க, 6ம் வகுப்பிலேயேமாணவர்களுக்கு சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, சட்டசபையில் முதல்வர் தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கும், பல்வேறு வகையான உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கும், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவை தேவைப்படுகின்றன.இத்தகைய சான்றிதழ்களை தேவையான நேரத்தில் பெறுகையில், மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, அவர்களின் 6ம் வகுப்பிலேயே, இத்தகைய சான்றிதழ்களை பெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.இதன்மூலம், மாணவர்கள் அந்தஆண்டிலேயே மேற்கூறிய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் மூலம், 6ம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

ஜூலை 2ம் தேதி மருத்துவக் மற்றும் பொறியியல் கல்வி கலந்தாய்வு

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவின் செயலர், விரைவில் நியமிக்கப்படுவார் என, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறினார்.மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு செயலராக இருந்த ஷீலா கிரேஸ் ஜீவமணி, கடந்த மார்ச் 31ம் தேதி, பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியரான சித்ரா, இப்பொறுப்பை வகித்து வருகிறார்.ஒரிரு நாளில்...: எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கானவிண்ணப்பங்கள் வினியோகம் விரைவில் துவங்க உள்ள நிலையில், செயலர் பணியிடத்தை நிரப்ப வேண்டி உள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறும் போது, "அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வராக பணிபுரிவோரை, மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு செயலராக நியமிக்க வேண்டும். இதற்கான பரிந்துரைப் பட்டியல், அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. ஓரிரு நாளில், செயலர் பணி நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்படும்,'' என்றார்.ஜூலை 2ல் கலந்தாய்வு: அரசு மற்றும் தனியார் ம

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 11ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் முதல் வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.ஏப்ரல் 4 முதல், 23ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்புபொதுத்தேர்வை, 10 லட்சத்து84 ஆயிரத்து 575 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த 26ம் தேதியில் இருந்து, 66 மையங்களில் நடந்து வருகின்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 11ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்,வழக்கமாக மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவுகளே தள்ளிப் போயிருப்பதால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் 20 நாட்கள் வரை தள்ளிப்போகின்றன.இந்த ஆண்டு, ஜூன் முதல் வாரத்தில் தான் முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. ஜூன் முதல் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிளஸ் 1 சேர்க்கை மட்டும் தாமதமாகவே நடைபெற உள்ளன.

பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - ஜூலை 2-ம் தேதி தொடக்கம்.

பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.எனினும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் பொதுப் பிரிவு கலந்தாய்வு, வழக்கம்போல் எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ம்தேதி தொடங்கி முடிந்த பிறகு, ஜூலை 9-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கலந்தாய்வின் முதல் நாளான ஜூலை 2-ம் தேதி, எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.இந்த மூன்று விளையாட்டு இடங்களுக்கான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் குழு தேர்வு செய்து அளிக்கும் நடைமுறை உள்ளது. எனவே எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் அதே ஜூலை 2-ம்

12-ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்தவுடன் இணையதளம் மூலம் மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண். 32373/ இஇ(மேநிக)/ 2012, நாள். 03.05.2012.12-ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்தவுடன் இணையதளம் மூலம் மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண். 32373/ இஇ(மேநிக)/ 2012, நாள். 03.05.2012 பதிவிறக்கம் செய்ய....

தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2012 - 2013 ஆம் ஆண்டு முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து வெளியிட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

2012 - 2013 ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கானமுன்னுரிமை(SENIORITY) மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு,பதவி உயர்விற்கு தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் (PANEL) தயாரித்து நடைமுறைப்படுத்துதல் சார்ந்துபார்வை1, 2ல் காணும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் / வழிகாட்டுதல் மற்றும் பார்வையில் காணும் அரசாணை ஆகியவற்றினை தவறாமல் பின்பற்றிட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது - மே மாதம் இறுதி வாரத்தில்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது, மதிப்பெண்களை மதிப்பெண் பட்டியலுக்காக கணினியில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.அதுவும் இந்த வாரத்திலேயே முடிவடைந்து மே மாதம் இறுதி வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேர்வுகள் இயக்குநரக வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசு பள்ளி மாணவர் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் தேர்ச்சி.

பட்டுக்கோட்டை தாலுக்காவில் அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற பாலமுரளிக்கு ஆசிரியர்கள், முன்னாள் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.பட்டுக்கோட்டை தாலுக்கா பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன் பாலமுரளி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல்முறையே தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை தேவேந்திரன் ஓய்வுபெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவார். தாய் அல்லிக்கொடி, சகோதரி ரம்யா. இவர், பல் டாக்டராக பணிபுரிகிறார். பாலமுரளியின் அண்ணன் உமாசங்கர் விவசாயம் செய்து வருகிறார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற பாலமுரளி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,யும், நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வும் படித்தார். இதைத்தொடர்ந்து பிடெக் படிப்பை காரைக்குடி சி.இ.சி.ஆர்.ஐ., கல்லூரியிலும் முடித்துள்ளார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே பாலமுரளி தேர்ச்சி பெற்று ஐ.ஆர்.பி.எஸ்., ஆக தற்போது வதோராவில் பயிற்சி பெற்று வருகிறார். இவரது படிப்பு துவக்கம் முதலே அரசு பள்ளிகளில் தமிழ்வழி மூலமே கல்வி கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்

14 ஆயிரம் மனுக்களில் பெயர்களே இல்லை -விண்ணப்பங்கள் நிராகரிப்பு இல்லை - தேர்வு வாரியம் அறிவிப்பு

டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த 6.50 லட்சம் பேரில், 14 ஆயிரம் பேர், விண்ணப்பங்களில் தங்களது பெயர்களைக் கூட பூர்த்தி செய்யாமல் கோட்டை விட்டுள்ளனர்.மேலும், 28 ஆயிரம் பேர், பல்வேறுதவறுகளை செய்திருப்பதைக் கண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம்அதிர்ச்சி அடைந்துள்ளது. விண்ணப்பங்களைக் கூட ஒழுங்காக பூர்த்தி செய்யாதவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக வந்து என்ன செய்யப் போகிறார்களோ என, ஆசிரியர் தேர்வு வாரியம் கவலை அடைந்துள்ளது.ஜூன் 3ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்காக 7.50லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதில், 6.50 லட்சம் விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை, "ஸ்கேன்' செய்யும் பணிகள், சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தன.டி.ஆர்.பி., அதிர்ச்சி:விண்ணப்பங்கள், "ஸ்கேன்' செய்யப்பட்டு, பரிசீலனை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியர்களாக இருப்பவர்களிலும், ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களிலும், பல ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதது தான், அலுவலர்களின்