உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகும்.

தொடக்க கல்வித்துறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 34 உதவி தொடக்கக்கல்வி அதிகாரி (ஏ.இ.இ.ஓ.)பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. பி.ஏ. பி.எட். அல்லது பி.எஸ்சி. பி.எட். கல்வித்தகுதி கொண்ட இந்த பதவிக்கு 68,536 பேர் விண்ணப்பித்தார்கள்.அவர்களில் 1,588 பேரின் விண்ணப்பங்கள் குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டன. 66,948 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஏ.இ.இ.ஓ தேர்வுக்கான விடைத்தாள்கள் கம்ப்ïட்டரில் மதிப்பீடு செய்யப்பட்டு, இதர அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை நம் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!