Posts

Showing posts from April, 2012

பகுதி நேர ஆசிரியர்கள் விடுமுறை கால சம்பளம் குறித்து மாநில திட்ட இயக்குனர் ஆணை

பகுதி நேர ஆசிரியர்கள் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு பருவ விடுமுறைகளிலும் பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு விடுமுறை காலங்களில் சம்பளம் கிடையாது - மாநில திட்ட இயக்குனர் ஆணை

new-history

history:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

new-zoology

zoology:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

new-botany

botany:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

new-chemistry

chemistry:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

new-physics

physics:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

new-maths

Maths:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

New-English

ENGLISH:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

new-tamil

TAMIL:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

New weightage paper l

paper-l:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

new- Geography

Geography:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் . Example: 69.07/BC/Tirunelveli

பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் தாமதம்

தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுஇரண்டு மாதங்களாகியும், அவர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், உடற்கல்வி, ஓவியம், கைத்தொழில் மற்றும் கணினி படிப்பு முடித்தவர்கள், மாதம்ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மார்ச் முழுவதும் பணியாற்றியும், முதல்மாத சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏப்ரல் மாதமும் முடிய உள்ளது.முதன்மைகல்வி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: சிறப்பாசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் நிதி ஒதுக்கி,அந்தந்த கிராம கல்வி குழுவில்உள்ள தலைவர் மற்றும் தலைமையாசிரியர் கையெழுத்திட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.மார்ச் மாதத்தில் இடையிலும், கடைசியிலும் சிலர் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் குறித்து கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்தில் 12 நாள்கள் பணியாற்றி இருந்தால், முழு சம்பளம் வழங்கப்படும்.குறைவான நாட்கள் எனில், அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படும். சில பள்ளிகளில்இருந்து ஆசிரியர் பட்டியல், பணியாற்றிய நாட்கள் விபரம் வரவில்லை. வந்தபின், ஒருசில நாட்களில் சம்பளம் வழங்கப்படும்

கல்வி கடன்- பொதுவான கேள்வி பதில்கள்.

ஏழை மாணவர்களின் வரப்பிரசாதமான கல்விக் கடன் திட்டம், அடித்தட்டு மாணவர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி சுமார் 25 தேசிய மயமாக்கப்பட்ட - பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி வருகின்றன.தங்களது குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக, எப்பாடுபட்டாவது வங்கியில் கல்விக் கடன் பெற்றே தீர வேண்டும் என்று ஆண்டுதோறும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பெற்றோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கல்விக் கடன் பெறுவது தொடர்ந்து சிக்கலான நடைமுறையாகவே இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வங்கிகளின் நடை முறைகளை பெற்றோர், மாணவர்கள் முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் இருப்பதும், சரியான முறையில், சரியான நபர்களை அணுகாததுமே இதற்குக் காரணம் என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.வங்கிக் கடன் விஷயத்தில் பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு சில முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்த பதில்

இலவச சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் துவக்கம்.

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கான இலவச சமச்சீர் பாடப்புத்தங்களை வினியோகம் செய்யும் பணி துவங்கியது.தர்மபுரி மாவட்டத்தில் 221 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.ஸி.,வகுப்புக்கு தேவையான சமச்சீர் பாட புத்தகங்கள் சென்னை பள்ளி கல்வி துறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.அந்தந்த பள்ளி வாரியாக பாடப்புத்தங்களை பிரித்து அனுப்பும் பணி துவங்கியது. முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா பாடப்புத்தகங்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைத்தார்.தமிழ், ஆங்கில பாடப்புத்தகம், 29,000, அறிவியல், சமூக அறிவியல் கணிதம் தலா, 57,000 புத்தகங்கள் தற்போது வந்துள்ளன. மொத்தம் ஒருலட்சத்து 42 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளது. இவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த வார இறுதிக்குக்குள் அனுப்பி வைக்கப்படும்.மாணவர்களுக்கு எப்போது வழங்க வேண்டும் என அரசு உத்தரவு வருகிறதோ அப்போது புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடமாறுதல் விண்ணப்பங்களை பெற தடை - ஆசிரியர்கள் அதிர்ச்சி.

திருநெல்வேலி: இடமாறுதல் விண்ணப்பங்களை பெற திடீர் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொடக்க கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.ஆனால் திடீரென இந்த விண்ணப்பங்களை அளிக்க வேண்டாம் என்றும் ஆசிரியர்களுக்கும், விண்ணப்பங்ளை பெற வேண்டாம் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால் தொடக்க கல்வித்துறை ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.இடமாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பங்களை அளித்தால்தான் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு கவுன்சிலிங் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட நாட்களில் உள் மாவட்ட மற்றும் வெளி மாவட்ட இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த வாய்ப்பு ஏற்படும்.ஆனால் விண்ணப்பங்கள் பெறப்படாத சூழ்நிலையில் இதுபோன்று கவுன்சிலிங் நடத்த வாய்ப்பு இல்லை. இ

மே 20க்குள் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வெளியிட வாய்ப்பு.

சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்கள் தவிர, வேறு தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால், மே மாதம் 20க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகக்கூடும் என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்களைத் திருத்த போதிய ஆசிரியர்கள் கிடைக்காததால், இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மட்டும், 2ம் தேதி வரை நான்கு மையங்களில் நடக்கின்றன. மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவர்கள் எழுதியுள்ளனர்.இவர்களின், 45 லட்சத்து 78 ஆயிரத்து 744 விடைத்தாள்களை திருத்தும் பணிகள், மாநிலம் முழுவதும் 47 மையங்களில் நடந்தன. இவற்றில், முக்கியப் பாட விடைத்தாள்கள் அனைத்தும், 43 மையங்களில் திருத்தி முடிக்கப்பட்டுவிட்டன.இந்த மையங்களில் இருந்து, விடைத்தாள்களின் மதிப்பெண் விவரங்கள், சென்னையில் உள்ள டேட்டா சென்டருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இங்கு, மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகின்றன.உருது உள்ளிட்ட சில சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்கள் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய விடைத்தாள்களை திருத்துவதற்குபோதிய அளவில் ஆசிரியர்கள் கிடைக்காததால், இந்த

B.SC.,(MATHS) DUAL DEGREE - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தெளிவுரை பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஒ.மு.எண். 14436 / சி 3 / இ 1 / 2012, நாள். 24.03.201210+2+3+1 கல்வித் தகுதியுடன் கூடுதலாக பி.எஸ்.சி. கணிதம் ஓராண்டு (இரட்டைப்பட்டம்) முறையில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியர் கணிதம் பதவி உயர்விற்கு விதிகளின் படி பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

*தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 9505 / ஜே3 / 2012, நாள். 20.04.2012*தொடக்கக்கல்வி இயக்கக கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்க /நடுநிலைப்பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2012-2013 ஆம் கல்வியாண்டில்01.06.2012வெள்ளிக்கிழமைஅன்று பள்ளிகள்திறக்கப்பட வேண்டும்என்று அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.*இதனை அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரைகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...

அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடியும் முன்பே, 10ம் வகுப்புக்கான புதிய புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டன. இதனால், இந்தாண்டு 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் "ஆல் பாஸ்" அறிவிக்க முடிவு செய்துள்ளதாக, கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஏப்.,18 முதல், 6 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் துவங்கின. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.,28) கடைசி தேர்வான சுற்றுச்சூழல் அறிவியல் தேர்வு நடக்கிறது. இரு தினங்களுக்கு முன், 10 ம் வகுப்பு சமச்சீர் கல்விக்கான புதிய புத்தகங்களை பள்ளிக்கல்வி துறை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தது.புத்தகங்களை பெற்ற தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்க, அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருந்தனர். உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த வாய்மொழி உத்தரவையடுத்து, 9 ம் வகுப்பு தேர்வை முடித்த மாணவர்களுக்கு, 10ம் வகுப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன.தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தி, முடிவு தெரியாமல் உள்ள நிலையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்புக்கான

தொடக்கக் கல்வி துறை - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளிதிறக்க

உத்தரவிடப்பட்டுள்ளதுதொடக்கக்கல்வி இயக்கத்தின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலை பள்ளிகள் 01.06.2012 வெள்ளிகிழமை அன்று திறக்கப்படவேண்டும் என்று இயக்குனரகம் ஆணை பிறப்பித்து உள்ளது .

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தெளிவுரை கடித எண். 15082 / ஓய்வூதியம் / 2012, நாள். 24.4.2012.பணியிலிருந்து ஓய்வு பெற்று அதற்குரிய ஓய்வூதியம் மற்றும் வாழ்க்கை துணை (SPOUSE) இறப்பிற்கு பிறகு பெரும் ஓய்வூதியம் ஆகிய இரண்டு ஒய்வூதியன்களைப் பெறும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ப கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு ஒய்வூதியங்களிலும் உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இரண்டு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 27.04.2012.  2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது. தற்போது மேற்படி பணிகளை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை நிறுத்தி வைக்கும்ப்படும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

கல்விமுறையின் குறைகளை களைய அமைச்சர் தலைமையில் குழு அமைப்பு.

தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இக்குழு, தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிந்து, தேவையான மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேர் உறுப்பினர்களாக வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் பணிகள் * ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல். * தரமான கல்வியை அளிப்பதற்காக, பள்ளிகளுக்கு தேவைப்படும் இன்றியமையாத கட்டமைப்பு வசதி, தளவாட வசதி, உபகரணங்கள் குறித்து ஆய்வுசெய்து, அரசுக்குப் பரிந்துரை அளித்தல் வேண்டும். * மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு ஏற்ப, தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை செய்ய, பரிந்துரை செய்ய வேண்டும். * அனைத்துப் பள்ளி செயல்பாடுகளையும் மேம்படுத்த, பள்ளி ஆய்வு முறைகளில் தேவைப்படும்

தமிழாசிரியர்கள் இனி பட்டதாரி ஆசிரியர்கள்!

 "தமிழாசிரியர்" என்பதை, இனி, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)" என ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு வந்துள்ள உத்தரவு: "பள்ளி உதவி ஆசிரியர்" என்பது, இனிமேல், பட்டதாரி ஆசிரியர் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் தமிழாசிரியர் என எழுதாமல், அதற்கு பதிலாக, பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) எனவும், அதேபோல் பிற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) என, பாட வாரியாகக் குறிப்பிட வேண்டும். பெயர் மாற்றம் செய்யப்பட்டதையே, வருகை பதிவேடு, ஆவணங்கள் உட்பட அனைத்திலும் குறிப்பிட வேண்டும். தமிழக தமிழாசிரியர் கழக கோரிக்கைப்படி, இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு புத்தகங்கள் ஏப்ரல் 26 முதல் விற்பனை.

பத்தாம் வகுப்பு புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 26) முதல் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. ஒரு புத்தகத்தின் விலை ரூ.70. ஒரு செட்டின் விலை ரூ.350 ஆகும்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களைப் பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வியாழக்கிழமை முதல் மேற்கொள்ள உள்ளனர்.  அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக, 9-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்தப் புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.  தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத் தலைமை அலுவலகத்திலும், 22 வட்டார அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.  மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலர்களுடன் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் ஏப்ரல் 26-ம் தேதி முதல் அந்தந்த ம

பள்ளி க்கல்வி துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் (2012-2013)

பள்ளிக்கல்வி துறை - ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான (2012 - 13) விண்ணப்பங்களை 28.04.2012 க்குள் தலைமையாரியரிடம் ஒப்படைத்து பின்பு அது அவர் மூலமாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் 30.04.2012 க்குள்  ஒப்படைக்கப்பட  வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.

திருத்தப்பட்ட சமச்சீர் பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன!

திருத்தி அச்சடிக்கப்பட்ட, புதிய பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள், இன்று(ஏப்ரல் 26) முதல் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வந்தன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான புத்தகங்களை, ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின், பள்ளி நிர்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தனியார் பள்ளிகளுக்கான விற்பனை, இன்று முதல் நடைபெறும் எனவும், பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. தேவையில்லாத பகுதிகள் நீக்கம்: ஆசிரியர் பயிற்சி இயக்குனகரம், தேவையில்லாத பகுதிகளை நீக்கம் செய்தும், தேவையான கருத்துக்களை சேர்த்தும், பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொண்டது. இதன்பின், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இந்தப் புத்தகங்கள், இன்று முதல் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் அறிவித்தார். பாடநூல் கழகம் அறிவிப்பு: இலவச பாடப் புத்தகங்களைப் பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, அந்தந்த மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள மையங்களுக்கு, அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன. முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்ட பள்ளிகளுக்கு 26ம் தேதி

அரசு கல்வித் தொலைகாட்சி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை

அரசு கல்வித் தொலைகாட்சியில் நிகழ்சிகளை  நடத்த ஆர்வமும் திறமையும் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை ஒரு நாள் பயிற்சி வாயிலாக சேகரிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை . இங்கே கிளிக் செய்து இயக்குனரின் செயல்முறைகளை டவுன்லோட் செய்யுங்கள் .

முப்பருவ மற்றும் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறைக்கான ஒரு நாள் பயிற்சி குறித்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் 2011-2012  இருப்பில் நிதி இருந்தால் அளிக்கவும் அல்லது நிதி அனுமதிக்கப்பட்ட பின்பு அடுத்த  பயிற்சியில் வழங்கவும் அறிவுரை. இங்கே கிளிக் செய்து செயல்முறைகளை டவுன்லோட் செய்து படிக்கவும்.

சிறப்பு கல்வியியல் (Spl B.Ed) பட்டப்படிப்பு வேலைவாய்பு பெற பொதுவான கல்வியியல் பட்டப்படிப்பாக (General B.Ed) அனுமதிப்பு

Public Services – Equivalence Committee – Degree of Bachelor of Education B.Ed (Special Education) equivalence to Bachelor of Education B.Ed.(General Education) – Recommendation of the Equivalence Committee – Orders – Issued.

2,895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 27ல் தேர்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, மே 27 ல் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மார்ச் 16 முதல், 30 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 3 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டதில், 1.80 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகின. இவற்றில், 1 லட்சத்து, 52 ஆயிரத்து, 547 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

தமிழகம் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் 10 ஆயிரம் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை தொடங்கினர். நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் ஈடுபடும் வருவாய் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முதல், வீடு வீடாக சென்று மக்களின் சமூக, பொருளாதார, ஜாதிவாரியாக தகவல்கள் பதிவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும் 2 ஊழியர்கள் வருவார்கள். ஒருவர் ஒரு படிவத்தில் விவரங்களை எழுதிக் கொள்வார். இன்னொருவர் லேப் டாப்பில் பதிவு செய்வார். பின்னர் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். குடும்ப தலைவரின் கையெழுத்தையும் இன்னொரு ஒப்புகை சீட்டில் கணக்கெடுப்பாளர்கள் பெற்று கொள்வார்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என 4 வகையாக பிரித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மக்களின் பொருளாதார நிலை எப்படி உள்ளது. எந்த மாதிரியான வீடுகளில் வசிக்கின்றனர். வேலை, வருமானம், ஜாதி, கல்வி, மாற்றுத் திறனாளி உ

மே 12-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 12-ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி முடிவடைந்தது.  இந்தத் தேர்வில் மொழிப்பாடங்கள் மற்றும் கணக்கு தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ந்த நேரத்தில், இயற்பியல் தேர்வில் 10 மற்றும் 6 மதிப்பெண்கள் பிரிவு வினாக்கள் பாடத் திட்டத்தில் இல்லாதவையாக கேட்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் சற்று கலக்கமடைந்தனர்.  கடந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட்டன.  "தேர்வுகள் முடிவுற்ற நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மே 2-ம் தேதி முடிவடையும். எனவே, மே 12-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக' திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. செல்வகுமார் தெரிவித்தார்.  தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டு காரணமாக நடைபெற்று முடிந்த பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வின் போது மாணவர்கள் படிக்க பெரும் சிரமத்துக்குள்ளாயினர். எனவே, விடைத

விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுத்தில் பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க ஏப்ரல் 22ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை அடுத்து, அடுத்த மாதம் மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. மே மாதம் 14ம் தேதி திங்கட்கிழமை முதல் 19ம் தேதி சனிக்கிழமை வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போக்குவரத்து வசதியை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நுழைவுத் தேர்வு முடிவும் வெளியாகும்.

ஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்.

ஊதிய குறை தீர்க்கும் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உரிய மனுக்களை பெற்று பரிசீலித்து ஊதிய முரண்பாடுகள் களைவது குறித்து அரசுக்கு உரிய பரிந்துரை அறிக்கையை அளிக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய குறை தீர்க்கும் குழுவிடம் 04.05.2012-க்குள் கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது dspgrc@tn.gov.in எனறமின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாடுகளை குறித்து கோரிக்கை மனு ஒன்று PDF FORMAT-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து E-MAIL முகவிரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அப்படிவத்தில் தங்கள் கருத்துகளை சேர்க்க விரும்பினால் சேர்த்து 04.05.2012-க்குள் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு : கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது  E-MAIL முகவிரி மூலமோ அனுப்பவும். அப்படிவத்தில் தங்கள் பெயர் முகவரி,தொடர்பு எண் மற்றும் E-MAIL ஆகியவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொன்னகாடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தமிழக அரசு 2012ல் பிப்ரவரி 7ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு எதிரானது. 2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முந்தைய அறிவிப்பாணைபடி பணி நியமனம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. நான் 2009ம் ஆண்டில் வெளியான அறிவிப்பாணைபடி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, 2010 செப்டம்பர் 15ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பதால், நானும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியதுள்ள

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொன்னகாடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தமிழக அரசு 2012ல் பிப்ரவரி 7ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு எதிரானது. 2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முந்தைய அறிவிப்பாணைபடி பணி நியமனம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. நான் 2009ம் ஆண்டில் வெளியான அறிவிப்பாணைபடி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, 2010 செப்டம்பர் 15ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பதால், நானும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியதுள்ள

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் சானர்ப்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திரு. எம். கோபால் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட மனுவில் கூறி இருப்பதாவது : -  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழ் ஏராளமான நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இது போன்ற தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப கடந்த 2007ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சில ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகு காலிப்பணியிடங்கள் இல்லை என்று கூறி மீண்டும் இடைநிலை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர்.  இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 2011 - 2012 கல்வியாண்டில் அனைவருக்க

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க 10 நடமாடும் மையங்கள். பள்ளி மாணவர்களுக்கு

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக 10 நடமாடும் மையங்கள் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார். பேரவையில் இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சுற்றுப்புறச் சூழல், குடும்பச் சூழ்நிலை காரணமாக ஏற்படும் மாற்றங்கள், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களால் கலக்கம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உளவியல் ஆலோசனைகள் வழங்கும் வகையில் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

கல்விக்கென்றே புதிய சேனல்: அமைச்சர்.

கல்விக்கென்றே ஒரு புதிய தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு துவக்கவுள்ளது. இத்தகவலை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் கூறியதாவது: இதன்மூலமாக, பள்ளி முடிந்தபிறகும், பாடங்களை வீட்டிற்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். செமினார்கள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் உள்பட, கல்வித்திறனை அதிகரிக்கும் பலவிதமான அம்சங்களை இந்த சேனல் கொண்டிருக்கும். இவ்வாறு அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் புதிதாக் இரண்டு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 11 புதிய கலை அறிவியல் கல்லூரிகளும், 7 புதிய பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வாசித்தார். இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிலிப்பட்டியிலும், தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சியிலும் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, அரியலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி, வேடசந்தூர், மொடக்குறிச்சி, திருமங்கலம், திருவொற்றியூர், பரமகுடி, கடையநல்லூர், அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம், அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அரசு பாடநூல் புத்தகங்களுக்கான விலை நிர்ணயம்.

 தமிழகம் முழுவதும் அரசு பாடநூல் புத்தகங்களை, தனியார் பள்ளிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் வகுப்பிற்கு 200 ரூபாயும், 8ம் வகுப்பிற்கு 300 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து விடப்படுகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளிட்டவற்றிற்கு அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் சொந்த பணத்தில் புத்தகம் வாங்கி கொள்ள வேண்டும். தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் எவ்வளவு மாணவ, மாணவிகள் இருக்கிறார்களோ அவர்களது எண்ணிக்கைக் ஏற்ப தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்தில் மொத்தமாக பணம் கட்டி தங்களுக்கு தேவையான புத்தகத்தை வாங்கிக் கொள்வர். ஜூன் மா

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: இடதுசாரிகள் கோரிக்கை.

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை வைத்தன.  இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம்:  கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): எந்தெந்தப் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தந்துவிடுகிறேன்.  ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும்போது முழு கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி மீண்டும் ஒரு தேர்வை திணிப்பது கூடாது.  மத்திய அரசின் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழக அரசு எதிர்த்ததை போலவே இந்த கல்வி உரிமைச் சட்டத்திலும் மீண்டும் ஒரு தேர்வு என்பதை தவிர்த்திட தகுதித் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுக்க வேண்டும்.  அமைச்சர் என்.ஆர். சிவபதி: உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் நியமனத்திற்கு கட்டாயக் கல்வி சட்டத்தின்படி தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது.  குணசேகரன் (சிபிஐ): ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்க

தமிழகத்தில் தொடக்க பள்ளி, இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 14 ஆயிரத்து 349 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, 900 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சிவபதி தெரிவித்தார். 22 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் 320 பள்ளிகளில் ஒன்று மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத 8 மாவட்டங்களில் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவர 140 லட்சம் செலவில் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும், நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்றும் சிவபதி தெரிவித்தார். இதுபோன்று பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுநர் குழு: அமைச்சர் தகவல்.

கல்வியின் தரத்தை உயர்த்த 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆய்வுசெய்ய வல்லுநர் குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் சிவபதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளை அவர் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் உயர்த்த கல்வி அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இவர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவார்கள். கல்வி தரத்தை உயர்த்த 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரை செய்தல், தற்போதுள்ள பாட நூல்களின் குறைகளை கண்டறிந்து தேவையான மாற்றங்களை கொண்டு வருதல், தரமான கல்வி வழங்க கட்டிட வசதி, இருக்கை வசதி, உபகரணங்கள் ஆகிய வசதிகளை பரிந்துரைத்தல், தேவைப்படும் முக்கியமான கல்விகள் ஆலோசனைகளை வழங்குதல், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த அரசு கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்-4,207, பட்டதாரி ஆசிரியர்கள்-17

கல்லூரிக் கட்டணம், இடஒதுக்கீட்டைக் கண்காணிக்க குழு: அரசு தகவல்.

கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா, இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்: கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட்): அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகளில் ரெகுலர் பாடப்பிரிவுகளில் குறைந்த கல்விக் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் சுயநிதி பாடப்பிரிவுகள் என்ற பெயரால் வணிகம், அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு ரூ. 20 ஆயிரம், ரூ. 30 ஆயிரம் என அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசிடம் இருந்து மானியத்தையும் பெற்றுக் கொண்டு ஒரு பக்கம் சாதாரண கட்டணம், மறுபக்கம் சுயநிதி பாடப்பிரிவுகள் என அதிகக் கட்டணம் வசூலிப்பது சரி அல்ல. சுயநிதி கல்லூரிகள் இதைவிட மோசமாக உள்ளன. எனவே, பொறியியல் கல்லூரிகளைப் போன்று அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழுவை அரசு நியமிக்க வேண்டும். இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க ம

மீதமுள்ள 2 தேர்வுகளைக் கண்காணிக்க இணை இயக்குநர்கள் நியமனம்.

திருவண்ணாமலை தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணிதப் பாடத் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றுள்ளதையடுத்து, மீதமிருக்கும் 2 தேர்வுகளையும் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்தப் பள்ளியில் நடந்த முறைகேடு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வந்தாலும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. அறிவியல் பாடத் தேர்வு வியாழக்கிழமையும் (ஏப்ரல் 19), சமூக அறிவியல் தேர்வு திங்கள்கிழமையும் (ஏப்ரல் 23) நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் இந்த இரண்டு தேர்வுகளையும் முறையாக நடத்துவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ., அறிமுகம்.தொழில் படிப்புகளை வேலைவாய்ப்புகள் சார்ந்ததாக இருக்கும் வகையில், இரட்டை பட்டங்களை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய புதிய படிப்பை AICTE (All India Council for Technical Education) தொடங்க உள்ளது. 12ம் வகுப்புக்கு பின்னர் AICTE அறிமுகம் செய்துள்ள மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இளநிலை பட்டம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டில் முதுநிலை பட்டம் வழங்கப்படும். 12ம் வகுப்புக்குப் பின்னர் இந்தப் படிப்பில் சேரும் மாணவனுக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்படும் இளநிலை பட்டத்தைக் கொண்டு மேலாண்மைத் துறையில் அவர் பணியாற்றலாம். ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மீண்டும் அதே படிப்பை ஓராண்டுகள் படித்து முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்யும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது எனAICTE  தலைவர் எஸ்.எஸ். மந்தா தெரிவித்துள்ளார். பொது நுழைவுத் தேர்வு மூலம் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள், அவர்கள் விருப்பப்படி மூன்றாவது ஆண்டிலோ அல்லது நான்காவது ஆண்டிலோ வேலைவாய்ப்புக்கு செல்லலாம். அதன் பின்னர் எப்போது விரும்புகிறார்களோ அப்போது மீண்டும் தங்களின் படிப்பைத் தொடரலாம் என அவர் குறிப்பிட்டார். இதேபோல் மற்றொரு ஒருங்கிணைந்த படிப்பில், தொழிற்கல்வியை, மேலாண்மைப் பாடத்துடன் இணைக்கும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேலாண்மையாளர்களுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு இந்தப் படிப்பை 5 ஆண்டு கால இரட்டை பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் மந்தா, இந்தப் படிப்பில் 6 மாத காலத்திற்கு தொழிற்சாலை சார்ந்த பயிற்சி (Internship) அளிக்கப்படும் என்றார். இந்தப் படிப்பை படிக்கும் மாணவர்கள் CAT அல்லது MAT தேர்வுகளை எழுதத் தேவையில்லை என்றும், ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த மேலாண்மைப் பட்டத்தை மாணவர்கள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படிப்புகளூம், 2012- 13ம் நிதியாண்டிலேயே தொடங்கப்படும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.

தொழில் படிப்புகளை வேலைவாய்ப்புகள் சார்ந்ததாக இருக்கும் வகையில், இரட்டை பட்டங்களை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய புதிய படிப்பை AICTE (All India Council for Technical Education) தொடங்க உள்ளது. 12ம் வகுப்புக்கு பின்னர் AICTE அறிமுகம் செய்துள்ள மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இளநிலை பட்டம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டில் முதுநிலை பட்டம் வழங்கப்படும். 12ம் வகுப்புக்குப் பின்னர் இந்தப் படிப்பில் சேரும் மாணவனுக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்படும் இளநிலை பட்டத்தைக் கொண்டு மேலாண்மைத் துறையில் அவர் பணியாற்றலாம். ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மீண்டும் அதே படிப்பை ஓராண்டுகள் படித்து முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்யும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது எனAICTE  தலைவர் எஸ்.எஸ். மந்தா தெரிவித்துள்ளார். பொது நுழைவுத் தேர்வு மூலம் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள், அவர்கள் விருப்பப்படி மூன்றாவது ஆண்டிலோ அல்லது நான்காவது ஆண்டிலோ வேலைவாய்ப்புக்கு செல்லலாம். அதன் பின்னர் எப்போது விரும்புகிறார்களோ அப்போது மீண்டும் தங்களின் படிப்பைத

ஏப்.,24ல் துவங்குகிறது 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 24ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.,4 ல் துவங்கி நடந்து வருகிறது. ஏப்., 23 ல் நிறைவு பெறுகிறது. இதில், 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கவுள்ளது. ஏப்., 24 ல் மாவட்ட கல்வி அதிகாரிகள் விடைத்தாள் திருத்தும் செய்யும் முகாம் பொறுப்பாளர்களாக பணி ஏற்பர். அப்போது விடைத்தாள்களின் கட்டுகளை பெற்று விடைத்தாள் திருத்தம் செய்ய ஏதுவாக, முதல்கட்ட பணிகளை செய்வர். ஏப்., 26 ல் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவர். 27 ல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர்.

சாதிவாரி கணக்கெடுப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது - மத்திய அரசு உத்தரவு.

கிராமப்புறங்களில் மேற்கொள்ள உள்ள சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு சில வழிக்காட்டுதல்களை வழங்கியுள்ளது. இவ்வழிக்காட்டுதல்கள் 25.07.2011 நாளிட்ட மத்திய அரசின் ஊராக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 26 பக்கத்தில் "It must be noted that the services of primary school teachers cannot be utilized for this purpose due to the ban imposed by the Right to Education Act, 2009" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. SECC-2011 IN RURAL - GOI - MINISTRY OF RURAL DEVELOPMENT GUIDELINES DATED.25.7.2011 

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதை தவிர்க்க கோரிக்கை.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் மதிப்புமிகு தேவராஜன் அவர்களை சந்தித்து 2012-2013ம் கல்வியாண்டு முப்பருவமுறைக்கான பயிற்சிகளை கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்கும் படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முப்பருவக் கல்விமுறை அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுவதால், ஆசிரியர்களை தயார்படுத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவிருககிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது. பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர். தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும் பயிற்சிகள் முழ

நடுநிலைப்பள்ளிகளில் கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்காளாக தரம் உயர்த்தி தேவைப்படும் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்து ஆணை வழங்குதல்.

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 00307 / இ 1 / 2011, நாள். 12.01.2012 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கும் பொருட்டு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட நடுநிலைப்பள்ளிகளின் சார்பான ஆசிரியர் மாணவர் நிர்ணய அறிக்கையின்படி கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அரசானை நிலை எண் . 100 பள்ளிக்கல்வித் துறை நாள். 27.06.2003 ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு இயக்குனரின் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டு கூடுதல் தேவையுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு பகிர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படுகிறது.

அரசு அதிகாரி ஆக எழுத வேண்டிய தேர்வுகள்

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 315-ன் படி நிறுவப்பட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இத்தேர்வாணையம் அரசுத் துறைகளின் பல்வேறு பதவிகளுக்குப் போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கிய பணியைச் செய்து வருகிறது. குரூப் 1 முதல் குரூப் 7 வரையிலான பல்வேறு பணிகளுக்கு பல்வேறு தகுதிகளுடைய தேர்வுகளை இத்தேர்வாணையம் நடத்துகின்றது, வயது வரம்பு: மேற்கூறிய தேர்வுகளை எழுத விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருத்தல் வேண்டும். அதே சமயம் அதிக பட்சம் 30 வயதை கடக்கக்கூடாது. ஆனால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்), பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்), அனைத்து ஜாதியைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதிகப்பட்சமாக 35 வயது வரை இத்தேர்வினை எழுதத் தகுதி பெற்றவர்களாகின்றனர். குரூப் 1 தேர்வு: குரூப் 1 தேர்வானது துணை ஆட்சியர், டி.எஸ்.பி., உதவி ஆணையர் (வணிக வரித்துறை), மாவட்டப் பதிவாளர் (பல்வேறு து

நாடு முழுவதும் ஏப். 20ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம் அதற்கான பயிற்சிகள் 16.04 .2012 தொடக்கம்

சமூக  பொருளாதார சாதிவாரி கணக்கு  எடுப்பிற்கான  பயிற்சி 16 , 17  மற்றும்  18.04.2012  தேதிகளில் நடைபெறுகிறது . கணினி இயகுனர்களுக்கான பயிற்சி 18  மற்றும் 19.04.2012   தேதிகளில் நடைபெறுகிறது. மேற்பார்வையாளர்களுக்கு  ரூபாய் 20,000 , கணக்கெடுப்பாளர்களுக்கு   ரூபாய். 18 ,000  மதிப்பூதியம் வழங்கப்படுகிறது . ஒவ்வொரு கணக்கெடுப்பாளருக்கும் ஒரு கணினி இயக்கு உதவியாளர் நியமிக்கப்படுவார் . கணக்கெடுப்பாளர் கணக்கை எடுக்க கணினி இயக்கு உதவியாளர் அதனை  மின் தகவலாக பதிவு செய்துகொள்வார் . தொடர்ந்து தெளிவாளன தகவல்களை பெற நம் இணையதளத்தை  Logon  செய்யுங்கள் . தேதிகள் சில மாவட்டங்களில் மாறலாம்  . நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கையடக்க கணினி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணிக்காக அவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் கணக்கெடுப்பு துவ

அரசாணை எண். 123 நிதித் துறை நாள். 10.04.2012 ன் படி தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஊதியக்குழு கல்வித்துறைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்துமா?

அரசாணை எண். 123  நிதித்(ஊதியப் பிரிவு) நாள். 10.04.2012 ன் படி நியமிக்கப்பட்ட ஊதிய குறைகளை நிவர்த்தி செய்யும் 3 நபர்(செயலாளர் மற்றும் கூடுதல் , இணை செயலாளர்)குழுவானது ஒரு சில துறைகளில் உள்ள குறிப்பிட்ட அலுவலர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். இக்குழுவானது அரசாணை எண். 71 மற்றும் அரசு கடிதம் எண். 19111 / PAYCELL / 2011-4 ஆகிய இரண்டு நிதித்துறை சார்ந்த  அரசாணைகளில்  குறிப்பிட்ட அலுவலர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் மேற்குறிப்பிட்ட அரசாணைகளை சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் மேன்மை தாங்கிய சென்னை உயர்நிதீமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த  தமிழக அரசால் மூன்று நபர் குழு அமைக்கப்பட்டு மேற்கூறிய அரசாணைகளால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே அரசுக்கு அவர்களின் குறைகள் குறித்து மனுக்கள் வழங்கியுள்ளவர்களும் / இனி வழங்க உள்ளவர்களின் மனுக்களையும் சேர்த்து  ஆராய்ந்து அரசுக்கு இக்குழு மூன்று மாதங்களுக்குள் பரிந்துரைகள் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் கீழ்காணும் துறைகளில் பணியாற்றும் ஒரு சில குறிப்பிட்ட  அலுவலர்களுக்கு  பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோ

ஆசிரியர் தகுதித் தேர்வு! TET: வினா - விடை!

இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல ஆசிரியர் தகுதித் தேர்வை   கட்டயமாக்கி தமிழக ஆசிரியர்களின் தரத்தினை உயர்த்த தமிழக அரசு ஆசிரியர் தகுதித்  தேர்வினை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. TET அறிவிப்பு: ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 12.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. * ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது. * ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார். * ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன. * கணினி ஆசிரியர்களுக்கு ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டம் அமலில் உள்ளது.

தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக ஏப்ரல் 16-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 4 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக ஏப்ரல் 16-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 4 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சம் ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சம் ஆசிரியர்களும் பயிற்சி பெறவுள்ளனர். வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக முப்பருவ முறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை இரண்டாம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் வரை மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. முப்பருவ முறையோடு தொடர் மதிப்பீட்டு முறையும் முதல்முறையாக அமல்படுத்தப்படுகிறது. தொடர் மதிப்பீட்டு முறையின் கீழ் முழு ஆண்டுத் தேர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் மாணவரின் ஆண்டு முழுவதுமான செயல்பாடு, கற்றல் திறன் போன்றவை மதிப்பீடு செய்யப்படும். இசை, விளையாட்டு, ஓவியம், மாணவர்களின் சுகாதாரம் போன்றவற்றுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். பயிற்சிக் கையேடு: ஆசிரிய

நாடு முழுவதும் ஏப். 20ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம்

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கையடக்க கணினி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணிக்காக அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்சம்பளம் வழங்கப்படும் என அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் கணக்கெடுப்பு துவங்குகிறது. 40 நாள் நடைபெற உள்ள கணக்கெடுப்பு பணியில் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாஸ்டர் டிரெய்னர்ஸ் நியமிக்கப்பட உள்ளனர். சென்னையில் பயிற்சி மாஸ்டர் டிரெய்னர்களுக்கு சென்னை மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். பின்னர். மாஸ்டர் டிரெய்னர்ஸ் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். கணக்கெடுப்பில் குடியிருப்பாளர்களின் அனைத்து விவரங்களையும் பெறும் வகையில், கேள்வி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு செல்வோருக்கு உதவியாக கையடக்க கம்ப்யூட்டருடன் (டேப்ளட் பிசி) அதை இயக்கவும் உதவியாளர் நியமிக்கப்பட உள்