ஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்.

ஊதிய குறை தீர்க்கும் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உரிய மனுக்களை பெற்று பரிசீலித்து ஊதிய முரண்பாடுகள் களைவது குறித்து அரசுக்கு உரிய பரிந்துரை அறிக்கையை அளிக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய குறை தீர்க்கும் குழுவிடம் 04.05.2012-க்குள் கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது dspgrc@tn.gov.in எனறமின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாடுகளை குறித்து கோரிக்கை மனு ஒன்று PDF FORMAT-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து E-MAIL முகவிரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அப்படிவத்தில் தங்கள் கருத்துகளை சேர்க்க விரும்பினால் சேர்த்து 04.05.2012-க்குள் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு : கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது  E-MAIL முகவிரி மூலமோ அனுப்பவும். அப்படிவத்தில் தங்கள் பெயர் முகவரி,தொடர்பு எண் மற்றும் E-MAIL ஆகியவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.