Posts

Showing posts from July, 2012

தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர்திரு ப.மணிஅவர்கள்நேற்றுடன் ஓய்வு பெற்றதையடுத்துதேர்வுத்துறை இயக்குனர்திருமதி தண்.வசுந்தரா தேவிஅவர்களிடம்,பள்ளிக்கல்வி இயக்குனர் பதவிகூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது

மத்திய பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (CTET)

மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நவம்பர் மாதம்18ம் தேதி நடைபெற உள்ளது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் 2ம் தாளுக்கும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சரியான பதில்களை தேர்வு செய்து எழுதும் வகையிலான அப்ஜெக்டிவ் கேள்விகளைக் கொண்ட இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படும்.ஒரு தாள் எழுத ரூ.500ம்,  இரண்டு தாளும் ரூ.800கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு தாளுக்கு ரூ.250ம், இரண்டு தாளுக்கு ரூ.400ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாவட்டத் திட்ட அலுவலகம் மற்றும் வட்டார வள மையங்களில் பணிபுரியும் பணியாளர்களின் விபரம் மாதந்தோறும் 5 ந் தேதிக்குள் அனுப்ப உத்தரவு.

மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 2870 / அ1 / அகஇ / 2012, நாள்.  .07.2012 பதிவிறக்கம் செய்ய...

தொடக்கக் கல்வி - பள்ளி வளாகங்களில் மாணவ /மாணவிகள் கைபேசி கொண்டு வருவதை தடை செய்து ஆணை வெளியிடப்பட்டது நடைமுறைபடுத்த இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 018610 / ஜே 2 / 2012, நாள்.   .07.2012 பதிவிறக்கம் செய்ய...

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் - மதுரை ஐகோர்ட் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு: நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத்தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அரசு 2009 ல், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி,ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்சதகுதியை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) நிர்ணயித்தது.இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறை 2011 நவ.,15 ல் அரசாணை 181 வெளியிட்டது. அதில், ‘பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநில பதிவு மூப்பு பின்பற்றப்படும்,’ என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வு அவசியமில்லை.ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 மார்ச் 7 ல், ‘அரசு உதவி பெறும் மற்

சாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்.

சாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம்  பதிவிறக்கம் செய்ய...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் ஆணை பெற்றவர்கள் பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு.

மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1813 / அ1 / அகஇ / 2012 ,நாள். 30.07.2012 பதிவிறக்கம்செய்ய...

ஆசிரியர் மான்யம் 2012-13 விடுவித்தல் மற்றும் பயன்பாட்டு வழிக்காட்டுதல்கள்

CLICK HERE & DOWNLOAD The Proceeding of SSA SPS's Teachers Grant Sanction & Usage Guidelines

பள்ளிக்கல்வி - 2012 - 2013ஆம் கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழிப் பிரிவுகள் அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் இரண்டு ஆங்கில மொழி பிரிவுகள் தொடங்க அரசானை வெளியிடப்பட்டது - சார்பு

பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 20883 / ஜி1 / இ1 / 2012, நாள். 27.07.2012 மற்றும் பள்ளி பட்டியல் பதிவிறக்கம் செய்ய...

தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - RTE 2009 - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை குறித்த பணியிட விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 600 006 ந.க.எண். 13275 / இ1 / 2012, நாள். 28.07.2012 பதிவிறக்கம் செய்ய...

பட்டதாரி ஆசிரியர்கள் 1,150 பேருக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித் துறையில், 1,150 பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியராக நேற்று பதவி உயர்த்தப்பட்டனர். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு கவுன்சிலிங் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன.அந்த வரிசையில், பள்ளிக் கல்வித் துறையில், தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்நேற்று நடந்தது.காலை 9:30 மணிக்கு, மாவட்ட வாரியாக இருந்த, 6,000 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டன. இதன்பின், பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் உமா (மேல்நிலைக் கல்வி), கண்ணப்பன் (இடைநிலைக் கல்வி), உஷாராணி (என்.எஸ்.எஸ்.,) ஆகியோர், கலந்தாய்வை நடத்தினர்.பணிமூப்பு வாரியாக ஆசிரியர் அழைக்கப்பட்டு, அவரவர் தேர்வு செய்த இடங்களில், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகள் வழங்கப் பட்டன.அழைக்கப்பட்ட 1,234 பேரில், 1,150 பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வு உத்தரவுகளை பெற்றனர். மீதமுள்ள காலிப் பணியிடங்களில்,நேரடித் தேர்வுமூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், நி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் இருந்து பணிமுறிவின்றிமுறையாக துறை அனுமதி பெற்று ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நியமனம் செய்யப்படும் பொழுது சேமிப்பு கணக்கிலுள்ள விடுப்புகளை அரசுப் பணியில் சேர்த்து கொள்ளலாம்.

அரசுக் கடித எண். 15603 / நிதித்(ஓய்வூதியக் குறைத் தீர்வு) துறை/2011 - 2, நாள். 28.03.2011 பதிவிறக்கம் செய்ய... மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ந.க.எண். 817 / ஆ4 / 2011, நாள். 27.05.2011 பதிவிறக்கம் செய்ய...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டை அரசுப்பள்ளியிலும் தொடராலாம்என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஓ.மூ.எண். 44146 / சி5 / இ1 / 2011, நாள். 10.06.2012 பதிவிறக்கம் செய்ய...

டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான கீ ஆன்சர்களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.உதாரணமாக, "சி' பிரிவில் ஆங்கிலம் பகுதியில் 78வது கேள்வியாக "அசெம்பிள்' வார்த்தைக்கு அர்த்தம்"மேணுபேக்சர்' என்றும், "டி' பிரிவில் 61வதாக இடம்பெற்றுள்ள இதே கேள்விக்கு"பிட்' என்றும் கீ ஆன்சரில் விடை குறிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல், ஆங்கிலத்தில் மட்டும், ஏ, பி, சி, டி பிரிவுகளில் பல கேள்விகளுக்குவிடைகள் வெவ்வேறாக தரப்பட்டுள்ளன. இதனால், எந்த"ஆன்சர்&' சரியானது என்று தெரியவில்லை என தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான, டி.இ.டி., இரண்டாம்தாள் தேர்வு விடைகள் ஏற்கனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்டு,அதன் மீதான ஆட்சேபனைகளை, 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு

பள்ளிக்கல்வித்துறை - இரட்டை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13943 / சி3 / இ1 / 2012, நாள். 27.07.2012 01.01.2012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவ்வி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பி.லிட்.,பி.ஏ., தமிழ் / ஆங்கிலம் / அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களைஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம் / கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை - 83 அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்30.07.2012 அன்றுநடைபெறவுள்ள பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என அறிவிக்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை மோசடி - 80 தலைமை ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாய்கிறது

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை மோசடியில் 80 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்காக ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 83 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ,மாணவியருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கியதில்ரூ.81 லட்சம் மோசடி நடந்துள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், புரோக்கர்கள்  இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடியில் தொடர்புடைய 2 தலைமை ஆசிரியர்் தலைமறைவாகிவிட்டனர். ஒரு வாரமாக போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். இருவரும் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற முயன்று வருகிறார்கள்.மோசடி வெளியான பின், உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்  பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விசாரணைநடத்தியதால் அவர்கள் உஷாராகி குழந்தைகளுக்கு உதவித்தொகை கொடுத்ததாக ஆவணங்களை தயார் செய்து விட்டனர். தற்போது இந்த ஆவணங்களின் நகல்களை உதவி தொடக்ககல்வி அலுவலர்கள் மூலம்போலீசார் பெற்றுள்ளனர். 80 பள்ளிகளின் ஆவணங்கள் இதுவரை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

புதிய மதிப்பெண் சான்றிதழ்: ஜூலை 31க்குள்பெற உத்தரவு

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின், மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ, மாணவியர், தங்களது புதிய மதிப்பெண் சான்றிதழை, 31ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப் பின், விடைத்தாள் நகல் பெற்ற மாணவ, மாணவியரில் பலர், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர். மறு மதிப்பீடு, மறுகூட்டல் பணி நடந்து முடிந்து விட்டது. மதிப்பெண் மாறிய மாணவர்களுக்கு, அது குறித்த தகவல் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டன. இணையதளத்தில், திருத்தப்பட்ட மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.திருத்தப்பட்ட, புதிய மதிப்பெண் சான்றிதழ்கள், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளது என அறிவிக்கப்பட்ட மாணவ, மாணவியர், ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் பள்ளிக்குச் சென்று, தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.இந்த தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழ் பெறாத மாணவ, மாணவியர் அதன்பின் தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு வந்து பெ

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் - மாணவர்களிடையே நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இயக்குநர் உத்தரவு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 4871 / ஈ 2 / 2012 , நாள். 26.07.2012 பதிவிறக்கம் செய்ய...

புதிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்: ஐகோர்ட்

பள்ளி பஸ்களில் செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க, அந்த வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழை வழங்க, தனிப்பிரிவு ஏற்படுத்தவும், புதிய விதிகளில் வழி வகை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது; 15 நாட்களுக்குள் வரைவு விதிகளை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்ததில், பின் சக்கரத்தில் சிக்கி, மாணவி ஸ்ருதி, உடல் நசுங்கி பலியானாள். சீயோன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு, ஸ்ருதி படித்து வந்தாள். சம்பவம் தொடர்பாக, டிரைவர் சீமான், பள்ளி தாளாளர் விஜயன், பஸ் கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆஜர்பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச், தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பள்ளி அதிகாரிகள், போக்குவரத்து கமிஷனர் மற்றும்பஸ்சுக்க

TRB Released TNTET Paper-I Answer keys

Click here

தொடக்கக்கல்வி மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வில் மாற்றம்

28.07.2012 - காலை - ஒன்றியத்திற்குள் பணி நிரவல் மற்றும்                    ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் மதியம் - ஒன்றியத்திற்குள் பொது மாறுதல் 29.07.2012 காலை - ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொது மாறுதல் 31.07.2012 காலை - மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல்

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்விற்கு தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமை பதவியுயர்வு பட்டியல் (panel) பாட வாரியாக வெளியீடு

தமிழ் ஆங்கிலம ் கணிதம் அறிவியல ் சமூகவியல ்

ஒன்றியத்திற்குள் பணி நிரவலின் பொது பள்ளியில் சேர்ந்த இளையவரை (Most Junior) தேதியின் அடிப்படையிலும் , இவ்வாறுஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்யப்படுவோரின்முன்னுரிமை ஒன்றியத்தில்சேர்ந்த தேதியின் அடிப்படையிலும் நிர்ணயிக்க - தொடக்கக்கல்வி இயக்குனர்ஆணை

click here & Download the DEE - Deployment Most Junior Reg Proceeding

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் நிரந்தரம் செய்யப்படாத ஆசிரியர்கள்

அரசு மேனிலைப் பள்ளிகளில், தற்காலிகமாக பணிபுரியும், 287 தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் இதுவரை நிரந்தரப்படுத்தவில்லை.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில், கணக்குப் பதிவியல் தணிக்கையில், மெக்கானிக், பயிர் பாதுகாப்பு, மேலாண்மையியல், கணிப்பொறியியல், தட்டெழுத்து உட்பட 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன.இதில் மொத்தம், 1,100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தொகுப்பு ஊதியத்தில் (தற்காலிமாக) வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாதச் சம்பளமாக, 2,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.இவர்களில், 15 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள், 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, பணி நிரந்தரம் செய்வதற்காக சான்றுகள் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.கடந்த 2010 ஜூலை மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 287 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது.பின்னர், 28