டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான கீ ஆன்சர்களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.உதாரணமாக, "சி' பிரிவில் ஆங்கிலம் பகுதியில் 78வது கேள்வியாக "அசெம்பிள்' வார்த்தைக்கு அர்த்தம்"மேணுபேக்சர்' என்றும், "டி' பிரிவில் 61வதாக இடம்பெற்றுள்ள இதே கேள்விக்கு"பிட்' என்றும் கீ ஆன்சரில் விடை குறிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல், ஆங்கிலத்தில் மட்டும், ஏ, பி, சி, டி பிரிவுகளில் பல கேள்விகளுக்குவிடைகள் வெவ்வேறாக தரப்பட்டுள்ளன. இதனால், எந்த"ஆன்சர்&' சரியானது என்று தெரியவில்லை என தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான, டி.இ.டி., இரண்டாம்தாள் தேர்வு விடைகள் ஏற்கனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்டு,அதன் மீதான ஆட்சேபனைகளை, 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கான விடைகளையும்(கீ-ஆன்சர்), நேற்றிரவு, இணையதளத்தில்(http://trb.tn.nic.in/) வெளியிட்டது.விடைகள் மீதான ஆட்சேபனைகளை, ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...