Posts

Showing posts from November, 2012

155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து,அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு,12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500,கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும்.கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்.60 இடங்களில்,பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுவதில்,தனியாருடன் இணைந்து செயல்படலாம் என,இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும்,அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.தனியாருடன் இணைந்து, கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது.பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கே.வி., பள்ளிகளுக்கு,இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம். இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து,அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு,12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500,கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும்.கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்.60 இடங்களில்,பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுவதில்,தனியாருடன் இணைந்து செயல்படலாம் என,இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும்,அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.தனியாருடன் இணைந்து, கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது.பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கே.வி., பள்ளிகளுக்கு,இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம். இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

குரூப் 1 முதனிலைத் தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதிக்குப் பதில் ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: துணை ஆட்சியர்,காவல் துறை துணை கண்காணிப்பாளர்,வணிகவரித் துறை உதவி ஆணையர் மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24 ஆகவும் வரும் ஜனவரி 27ம் தேதி தேர்வு நடைபெறும்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,தாங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இ,பாஸ்புக் சேவை தொடக்கம் பி.எப். கணக்கு இருப்பு இணையதளத்தில் பார்க்கலாம்

இ,பாஸ்புக் சேவையை தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இதன் முலம் நாடு முழுவதும் உள்ள 5 கோடி உறுப்பினர்கள் தங்கள் கணக்கை ஆன்,லைனில் பார்த்துக்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வருங்கால சேமிப்பு நிதி ஆணையர் ஆர்.சி.மிஸ்ரா கூறியதாவது: தற்போது தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி திட்டத்தில் (ஈபிஎப்) உறுப்பினராக இருந்து, அவரது கணக்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அத்தகையவர் ஒவ்வொரு மாதமும் இ,பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் இந்த விவரங்கள் கிடைக்கும்.பணியில் இருந்து விலகிய நிலையில்,செயல்படாத நிலையில் இருக்கும் தங்கள் கணக்கு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கும்போது,அவரது இ, பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி நிறுவனத்தின் உறுப்பினர் இ,பாஸ்புக் சேவையை பெற பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் அடையாள அட்டை,பாஸ்போர்ட்,வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி இந்த இணையதளத்தில் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டு

பிளஸ் 2 தேர்வுக்கு 2000 தேர்வு மையங்கள

மார்ச் மாதம் தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரி யில் 2000 தேர்வு மையங்கள் அமைக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.பிளஸ்2 வகுப்பு படிக்கும் மாணவ& மாணவியருக்கு மார்ச் முதல் வாரம் பொதுத்தேர்வுகள் தொடங்கும். கடந்த ஆண்டு 7 லட்சத்து 63 ஆயிரம் மாணவ,மாணவியர் தேர்வு எழுதினர்.இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவியரின் பட்டியல்கள் பெறப்பட்டு வருகின்றன. இது ஜனவரி மாதம் இறுதி செய்யப்படும். பிளஸ் 2 தேர்வை தமிழ் வழியில் எழுதும் மாணவர்களுக்கு, வழக்கம்போல் இந்த ஆண்டும் தேர்வுக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.ஆங்கில வழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு தனித்தேர்வர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக,சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்காக இந்த ஆண்டு 2000 தேர்வு மையங்கள் அமைக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. 50 தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்க மனு கொடுத்துள்ளனர். முறைகேடுகளை தடுப்பதற்க

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார் : தணிக்கையும் இல்லை; கணக்கும் இல்லை.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்,பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடிக்கப்படும் நிதியில்,முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கு விவரங்களை,ஆசிரியர்களுக்கு தருவது இல்லை எனவும், ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு, ஓய்வூதிய நிதி குறித்த கணக்குகள்,சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது கணக்கு தணிக்கை அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. தொடக்ககல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் கணக்கு விவரங்கள், சென்னை,கோட்டூர்புரத்தில்உள்ள, "டேட்டா சென்டர்' மையத்தில் பராமரிக்கப்படுகிறது. 2003ல் அமல்படுத்தப்பட்ட திட்டம் : கடந்த, 2003, ஏப்ரல் 1ம் தேதி,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.இதற்குப் பின், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், கல்வித்துறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தொடக்க கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களின் சம்பளம் மற்றும் டி.ஏ.,வில், 10 சதவீதத்தை, பங்களிப்பு ஓய்வூதிய

VILLAGE ADMINISTRATIVE OFFICER (VAO) - 2012 RESULTS RELEASED

TO VIEW VAO EXAM 2012-13 RESULTS CLICK HERE...

அரசு தேர்வுகள் துறை - 10 ஆம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் - கட்டாய வினாக்கள் பொது வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது - அரையாண்டு தேர்வு முதல் நடைமுறைப்படுத்த அரசு தேர்வுகள் துறை உத்தரவு.

அரசு தேர்வுகள் துறை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.இயக்குனர் / 2012, நாள்.27.11.2012 பதிவிறக்கம் செய்ய... 10 STD MATHS BLUE PRINT MODIFIED INSTRUCTIONS CLICK HERE...

உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,அடுத்த மாதம், 7ம் தேதி,கலந்தாய்வு நடக்கிறது.சென்னையில் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் உரிய சான்றுகளுடன் ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில்,2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப,ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஒதுக்கீடு பெறப்பட்டது.இதன் படி,ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47 பேருக்கு, அடுத்த மாதம்,7ம் தேதி, 11:00 மணிக்கு, சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கிறது.அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர்.முதலில் 5800 என்று அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பின்பு 7500 என்று கூறப்பட்டது இது இறுதியாக எந்த தொகையை வந்து அடையும் என்பது இறுதி செய்யப்பட்ட காலிபணியிடங்களின் கணக்கெடுப்பிற்கு பிறகே தெரியவரும்.இந்த நிலையில் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியவர்கள் கூறியதன் வாயிலாக இந்த மாதம் இறுதிக்குள் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போதுதான் காலிபணியிட விவரங்கள் திரட்டும் பணி நடைபெற்று வருவதால் ஒரு வாரம் காலதாமதமாகவே இந்த பணிகள் நடைபெறும் என்பது ஊகிக்க முடிகிறது.TET பற்றிய பலரும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்பாட்டங்களை நடத்திவரும் வேலையில் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் பணியிடங்கள் அனைத்தும் சனவரி மாதத்தில் நிரப்பப்படும் என்றும் கல்வ

PG - TRB வழக்கு நிலுவை பற்றிய விவரம்

பல வழக்குகளை சந்தித்து இறுதியாக PG TRB க்கு இருமடங்கான தகுதியானவர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.எப்படியோ... பிரட்சனைகள் எல்லாம் முடிந்து வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கு கிடைத்ததோ இந்த முறையும் ஏமாற்றம் தான். யாரோ ஒருவர் Applied Mathematics படித்து TRB ல் தேர்ச்சி பெற்று தற்போது வேலைகிடையாது என்று கேள்விபட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறாராம். அதுமட்டும் அல்லாமல் எதற்காக 2:1 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கேள்விகள் எழுந்துள்ளதாம்.இதுதான் இப்படி என்றால் TET க்கு ஏதோ ஒரு வழக்கை நீதி மன்றத்தில் தொடுத்துள்ளார்களாம் 4500 பேர் சார்பாக. ஆனால் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியதில் இந்த மாதம் இறுதிக்குள் Selection list வெளியிடப்பட்டு அடுத்த மாத தொடக்கத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த வழக்கு தொடுப்பவர்களுக்கு ஒரு கேள்வி... ஒரு வேலையும் இன்னும் ஒழுங்காக போடப்படவில்லை இந்த 6 மாதத்தில் இப்போது போடப்பட்ட Steno Graph & typist பணியிடங்களில் கூட ( Final tally steno called 1154 :

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வி இயக்ககத்தில் 03.12.2012 அன்று நடைபெறும் கூட்டம் - அரசாணை.216 படி தேர்வுநிலை / சிறப்புநிலை நீட்டிப்பது, அரசாணை.193 படி நிரப்பப்பட்ட SSA பணியிடங்கள் விவரங்கள் கோரி உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.24769 / கே3 / 2012, நாள்.29.11.2012 பதிவிறக்கம் செய்ய...

GROUP-IV (Date of Written Examination:07.07.2012)TYPIST COUNSELLING SCHEDULE

GROUP-IV (Date of Written Examination:07.07.2012)TYPIST COUNSELLING SCHEDULE

மதுரை காமராஜர் பல்கலைக்கழக்கத்தால் வழங்ககப்படும் B.A Communication English என்ற பட்டப்படிப்பு B.A English என்ற பட்டப்படிப்பிற்கு சமமாக கருதி பணியமர்விற்கு வாய்ப்பளிக்க அரசாணை வெளியீடு

click here to download - G.O (1D) No. 333 Dt : November 27, 2012 Higher Education –Public Services- Equivalence of Degree – B.A, Communicative English degree awarded by the Madurai Kamaraj University as equivalent to B.A., English – Recommendation of Equivalence Committee – Orders issued.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த கை,கால் பாதிக்கப்பட்ட 9 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கி தமிழக அரசு ஆணை வெளியீடு

click here to download the GO 202 of Appointment orderfor 9  (ortho affected) Teachers

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2012-12 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங் கள் கேட்டு - பள்ளிக்கல்வி செயல்முறை

CLICK HERE FOR DSE PROCEEDING - EDUCATIONAL ASSISTANCE TO TEACHERS' CHILDREN WHO ARE STUDYING VOCATIONAL COURSE BY NATIONAL TEACHERS WELFARE FINANCIAL INSTITUTION

2012ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் விருதுகளுக்கான தகுதியான விண்ணப்பங்கள் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

click here to download the Govt Letter and DEE proceeding of Seeking Members for Award

வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாத, 300 அரசு பள்ளிகளுக்கு,வட்டியுடன் மீண்டும் கட்டண ரசீது அனுப்பி,மின்வாரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வளவு அதிக தொகையை செலுத்த முடியாது என்பதால்,வட்டியை ரத்து செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில் மின்வாரியத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் மேலமடை உட்பட, 300 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 2009 ம் ஆண்டு முதல், மின் கட்டணம் செலுத்தவில்லை.ஜனவரியில் பள்ளிகளின் மின் இணைப்பை வாரியம் துண்டித்தது. மின்சாரம் இன்றி மின்விசிறி,விளக்குகள் செயல்படாததுடன், "கணினி வழி கற்றல்' திட்டமும் முடங்கியது.பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் இப்பிரச்னை தெரிவிக்கப்பட்டது.பள்ளிகள் செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள், மின்வாரியம் மூலம் பெற்று அனுப்பப்பட்டன.இதற்குரிய நிதியை ஒதுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.இதனிடையே நிலுவை கட்டணத்தை வட்டியுடன்,செலுத்த மீண்டும், ரசீது அனுப்பி உள்ளது மின்வாரியம். தலைமையாசிரியர்கள் கூறுகையில்,"மின்வாரியம் அனுப்பியுள்ள புதிய ரசீது குறித்து மேலிடத்தில் அனுமதி பெற, மேலும் தாமதம் ஏற்படும். எனவே, வட

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் 18 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் 18 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தேர்தல் திருச்சியில் நடந்தது. தேர்தல் ஆணையர்களாக நெடுஞ்செழியன், பாசி செயல்பட்டனர்.இதில் சென்னையை சேர்ந்த கயத்தாறு மாநில தலைவராகவும்,நெல்லை இசக்கியப்பன் பொது செயலாளராகவும்,புதுக்கோட்டை மதலை முத்து பொருளாளராகவும்,திருச்சி அருணகிரியார் அமைப்பு செயலாளராகவும்,காஞ்சிபுரம் வெங்கடேசன் தலைமை இட செயலாளராகவும்,கன்னியாகுமரி எட்வின் பிரகாஷ் துணை பொது செயலாளராகவும், மாநில செயலாளராக சென்னை ஜெயராணி,மாநில தணிக்கையாளர்களாக நெல்லை பாபு, மாநில துணைத் தலைவர்களாக வேலூர் பாக்கியராஜ், திருவண்ணாமலை நவநீத சுந்தர், மாநில இணை செயலாளர்களாக விருதுநகர் அப்பாதுரை, விழுப்புரம் ஸ்டீபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 18 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை 1.6.2006 க்கு முன்பிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். பிளஸ் 2 முடிக்காமல் பதவி உயர்வில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வரும் டிசம்பர் 3ம் தேதியிலிருந்து தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி

டி.இ.டி.,இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால்,தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர்.இது மட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும்,பள்ளி கல்வித்துறை,இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.டி.இ.டி., தேர்வில்,தேர்ச்சி பெற்றதும்,மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில்,தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய,முதலில் டி.ஆர்.பி.,திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு,ஒரு தகுதித் தேர்வே;அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய,வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என,உத்தரவிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, பிளஸ் 2, பட்டப் படிப்பு,ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றுக்கு, 40 மதிப்பெண், டி.இ.டி.,தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு,அதனடிப்படையில், தகுதியான ஆசிரியரை தேர்வு செய்யும் புதிய முறையை,தமிழக அரசு அறிவித்தது.ஜூலையில் தேர்வு பெற்ற, 2,448 பேர் மற்றும் அக்டோபரில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேருக்கும், புதிய தேர்வு முறை கணக்கிடப