ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த
ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள்
முழு வீச்சில் திரட்டி வருகின்றனர்.முதலில் 5800 என்று அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
பின்பு 7500 என்று கூறப்பட்டது இது இறுதியாக
எந்த தொகையை வந்து அடையும் என்பது இறுதி செய்யப்பட்ட காலிபணியிடங்களின் கணக்கெடுப்பிற்கு பிறகே தெரியவரும்.இந்த நிலையில் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியவர்கள் கூறியதன் வாயிலாக இந்த மாதம் இறுதிக்குள் காலிபணியிட விவரங்கள்
வெளியிடப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில்
கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
தற்போதுதான் காலிபணியிட விவரங்கள் திரட்டும்
பணி நடைபெற்று வருவதால் ஒரு வாரம்
காலதாமதமாகவே இந்த பணிகள் நடைபெறும் என்பது ஊகிக்க முடிகிறது.TET பற்றிய பலரும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும்
ஆர்பாட்டங்களை நடத்திவரும் வேலையில் பணியிட
ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்னும் ஓரிரு வாரங்களில்
தொடங்கும் என்றும் பணியிடங்கள் அனைத்தும்
சனவரி மாதத்தில் நிரப்பப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஒவ்வொரு முறையும்
பணியிடங்களை நிரப்புவது சனவரி மாதத்தில்
தான் நடைபெறுவதால் இந்த முறையும் சனவரி மாத்தில்
பணியிடங்கள் நிரப்புதல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.