குரூப் 1 முதனிலைத் தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம்
தேதிக்குப் பதில் ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அரசுப்பணியாளர்
தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துணை ஆட்சியர்,காவல் துறை துணை கண்காணிப்பாளர்,வணிகவரித் துறை உதவி ஆணையர் மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 1 முதனிலைத்
தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6ம் தேதி என
நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது தேர்வு தேதி
மாற்றப்பட்டுள்ளது.அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க
கடைசி நாள் டிசம்பர் 24 ஆகவும் வரும் ஜனவரி 27ம்
தேதி தேர்வு நடைபெறும்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,தாங்கள்
விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு தினங்களுக்குள்
கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.