155 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155
மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார்
பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள
மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து,அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு,12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17),
நாடு முழுவதும், 500,கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும்.கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்.60 இடங்களில்,பள்ளிகளுக்கான
கட்டடங்கள் கட்டப்படுகின்றன.கேந்திரிய வித்யாலயா
பள்ளிகள் கட்டுவதில்,தனியாருடன் இணைந்து
செயல்படலாம் என,இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும்,அந்த முடிவு ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.தனியாருடன் இணைந்து,
கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது.பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும்,
கே.வி., பள்ளிகளுக்கு,இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம். இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...