உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள,
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,அடுத்த மாதம், 7ம் தேதி,கலந்தாய்வு நடக்கிறது.சென்னையில்
நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் உரிய சான்றுகளுடன் ஆஜராக வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில்,2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை
நேரடியாக நிரப்ப,ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்,
ஒதுக்கீடு பெறப்பட்டது.இதன் படி,ஆதிதிராவிடர்
நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47
பேருக்கு, அடுத்த மாதம்,7ம் தேதி, 11:00 மணிக்கு,
சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில்,
கலந்தாய்வு நடக்கிறது.அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!