கல்வி உதவித்தொகை மோசடி - 80 தலைமை ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாய்கிறது

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை மோசடியில் 80 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்காக ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 83 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ,மாணவியருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கியதில்ரூ.81 லட்சம் மோசடி நடந்துள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், புரோக்கர்கள்  இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடியில் தொடர்புடைய 2 தலைமை ஆசிரியர்் தலைமறைவாகிவிட்டனர். ஒரு வாரமாக போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். இருவரும் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற முயன்று வருகிறார்கள்.மோசடி வெளியான பின், உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்  பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விசாரணைநடத்தியதால் அவர்கள் உஷாராகி குழந்தைகளுக்கு உதவித்தொகை கொடுத்ததாக ஆவணங்களை தயார் செய்து விட்டனர். தற்போது இந்த ஆவணங்களின் நகல்களை உதவி தொடக்ககல்வி அலுவலர்கள் மூலம்போலீசார் பெற்றுள்ளனர். 80 பள்ளிகளின் ஆவணங்கள் இதுவரை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆவணங்களையும் ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள கல்வி உதவித்தொகை தொடர்பான ஆவணங்களையும் போலீ சார் ஒப்பிட்டு பார்த்து விசாரணையைதுவக்கி உள்ளனர்.சுகாதாரம் குறைவான தொழில் புரியும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஸீ1820 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் போது, மாணவரின் பெற்றோர் சுகாதாரம் குறைவான தொழில் செய்து வருகிறார் என சான்று அளிக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளர்களும், கிராமங்களில் வி.ஏ.ஓக்களிடமும் இந்த சான்று பெறலாம்.ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பெறப்பட்ட கல்வி உதவித்தொகையில், இதுபோன்ற சான்றிதழ்கள் எதையும் தலைமை ஆசிரியர்கள் கொடுக்கவில்லை எனதெரிகிறது.இதை சரிபார்க்கவேண்டிய அலுவலர்களும், அதை ஆய்வு செய்யவில்லை. இதனால், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் மீதான பிடி இறுகியுள்ளது.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.