இலவச சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் துவக்கம்.

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கான இலவச சமச்சீர் பாடப்புத்தங்களை வினியோகம் செய்யும் பணி துவங்கியது.தர்மபுரி மாவட்டத்தில் 221 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.ஸி.,வகுப்புக்கு தேவையான சமச்சீர் பாட புத்தகங்கள் சென்னை பள்ளி கல்வி துறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.அந்தந்த பள்ளி வாரியாக பாடப்புத்தங்களை பிரித்து அனுப்பும் பணி துவங்கியது. முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா பாடப்புத்தகங்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைத்தார்.தமிழ், ஆங்கில பாடப்புத்தகம், 29,000, அறிவியல், சமூக அறிவியல் கணிதம் தலா, 57,000 புத்தகங்கள் தற்போது வந்துள்ளன. மொத்தம் ஒருலட்சத்து 42 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளது. இவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த வார இறுதிக்குக்குள் அனுப்பி வைக்கப்படும்.மாணவர்களுக்கு எப்போது வழங்க வேண்டும் என அரசு உத்தரவு வருகிறதோ அப்போது புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.