history:கீழே வரும் Comment box-ல் தங்களது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.அனைத்து TET நண்பர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அறிய உதவியாக இருக்கும் .
பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத...
செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் கட்டாய கல்வி சட்டத்தில் கொண்டு வரும் வகையிலான சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.குழந்தைகளுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி கற்றுத்தரும் வகையில், கல்வி அடிப்படை உரிமை சட்ட மசோதா, ராஜ்யசபாவில் கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலே, காங்கிரஸ் எம்.பி., பிரியா தத் போன்றோர், "குறிப்பிட்ட சிலநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை,பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. குறிப்பாக, செயல் திறன் குறைந்தகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்கி, வீடுகளிலேயே, கல்வி கற்றுத் தருகின்றனர்.இதனால், அந்த குழந்தைகள் தனிமை சூழலில் வசிக்கின்றனர். அவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கும் வகையில், கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டத்தில், செயல் திறன் குறைந்த குழந்தைகளையும் சேர்க்க வேண்டும்" என, வலியுறுத்தினர்.இதைத் தொடர்ந்து, செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையிலான, கல்வி அடிப்படை உரிமைசட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஆசிரியர் மறுதகுதித் தேர்வின் மூலம் தேர்வான 18000 ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பணி நியமன ஆணைகளை வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள...
Comments
Post a Comment