பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் தாமதம்

தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுஇரண்டு மாதங்களாகியும், அவர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், உடற்கல்வி, ஓவியம், கைத்தொழில் மற்றும் கணினி படிப்பு முடித்தவர்கள், மாதம்ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மார்ச் முழுவதும் பணியாற்றியும், முதல்மாத சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏப்ரல் மாதமும் முடிய உள்ளது.முதன்மைகல்வி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: சிறப்பாசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., மூலம் நிதி ஒதுக்கி,அந்தந்த கிராம கல்வி குழுவில்உள்ள தலைவர் மற்றும் தலைமையாசிரியர் கையெழுத்திட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.மார்ச் மாதத்தில் இடையிலும், கடைசியிலும் சிலர் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் குறித்து கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்தில் 12 நாள்கள் பணியாற்றி இருந்தால், முழு சம்பளம் வழங்கப்படும்.குறைவான நாட்கள் எனில், அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படும். சில பள்ளிகளில்இருந்து ஆசிரியர் பட்டியல், பணியாற்றிய நாட்கள் விபரம் வரவில்லை. வந்தபின், ஒருசில நாட்களில் சம்பளம் வழங்கப்படும், என்றார்.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...