மே 20க்குள் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வெளியிட வாய்ப்பு.

சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்கள் தவிர, வேறு தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால், மே மாதம் 20க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகக்கூடும் என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்களைத் திருத்த போதிய ஆசிரியர்கள் கிடைக்காததால், இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மட்டும், 2ம் தேதி வரை நான்கு மையங்களில் நடக்கின்றன. மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவர்கள் எழுதியுள்ளனர்.இவர்களின், 45 லட்சத்து 78 ஆயிரத்து 744 விடைத்தாள்களை திருத்தும் பணிகள், மாநிலம் முழுவதும் 47 மையங்களில் நடந்தன. இவற்றில், முக்கியப் பாட விடைத்தாள்கள் அனைத்தும், 43 மையங்களில் திருத்தி முடிக்கப்பட்டுவிட்டன.இந்த மையங்களில் இருந்து, விடைத்தாள்களின் மதிப்பெண் விவரங்கள், சென்னையில் உள்ள டேட்டா சென்டருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இங்கு, மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகின்றன.உருது உள்ளிட்ட சில சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்கள் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய விடைத்தாள்களை திருத்துவதற்குபோதிய அளவில் ஆசிரியர்கள் கிடைக்காததால், இந்தப் பணிகள் இன்னும் முடியவில்லை. நான்கு மையங்களில் நடந்து வரும் இப்பணிகள், 2ம் தேதி தான் முடிகிறது.தேர்வு முடிவுகள் எப்போது வரும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் கேட்டபோது, "கடந்த ஆண்டு மே 9ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு, மே 10க்குள் வெளியிடுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இன்னும் ஏராளமான பணிகள் இருக்கின்றன. 20ம் தேதிக்குள் வெளியிடுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்" என்றனர்

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...