ஏப்.,24ல் துவங்குகிறது 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 24ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.,4 ல் துவங்கி நடந்து வருகிறது. ஏப்., 23 ல் நிறைவு பெறுகிறது. இதில், 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கவுள்ளது. ஏப்., 24 ல் மாவட்ட கல்வி அதிகாரிகள் விடைத்தாள் திருத்தும் செய்யும் முகாம் பொறுப்பாளர்களாக பணி ஏற்பர். அப்போது விடைத்தாள்களின் கட்டுகளை பெற்று விடைத்தாள் திருத்தம் செய்ய ஏதுவாக, முதல்கட்ட பணிகளை செய்வர். ஏப்., 26 ல் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவர். 27 ல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர்.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.