மே 12-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 12-ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி முடிவடைந்தது.  இந்தத் தேர்வில் மொழிப்பாடங்கள் மற்றும் கணக்கு தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ந்த நேரத்தில், இயற்பியல் தேர்வில் 10 மற்றும் 6 மதிப்பெண்கள் பிரிவு வினாக்கள் பாடத் திட்டத்தில் இல்லாதவையாக கேட்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் சற்று கலக்கமடைந்தனர்.  கடந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட்டன.  "தேர்வுகள் முடிவுற்ற நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மே 2-ம் தேதி முடிவடையும். எனவே, மே 12-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக' திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. செல்வகுமார் தெரிவித்தார்.  தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டு காரணமாக நடைபெற்று முடிந்த பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வின் போது மாணவர்கள் படிக்க பெரும் சிரமத்துக்குள்ளாயினர். எனவே, விடைத்தாள்கள் திருத்தும் பணியில் கடுமை காட்டக் கூடாது என்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  ஆனால், விடைத்தாள் திருத்தும் பணியில் கல்வித் துறை விதிமுறைகள் எப்போதும்போல கடைப்பிடிக்கப்படுமென கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அண்மையில் திருச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி. ரைமண்ட் உத்திரியராஜ், மே முதல் வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சலிங்குக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுமென தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.