பள்ளிகளில் காலிப் பணியிட விபரங்கள் சேகரிப்பு

தமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்களை உடனடியாக வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் பாட வாரியாக ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப முடியாததால் அந்த இடங்களில் அருகில் உள்ள பள்ளிஆசிரியர்களை மாற்றம் செய்து பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்த கல்வியாண்டில் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடனே வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. காலிப்பணியிட விபரங்களை உடனடியாக பள்ளி தலைமையாசிரியர்களிடம் பெற்றுபள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.