நீதிமன்ற தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் மீது சிறப்புகவனம் செலுத்தி செயல்பட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தமிழகத்தில் அண்மையில் புதியதாக தொடக்கக் கல்வி இயக்குனராக பதவி ஏற்ற திரு. இராமேஸ்வரன் முருகன் அவர்கள் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் அதில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொடக்கக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை, தேர்ந்தோர் பட்டியல் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை தன்னுடைய தலைமையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் உடனுக்குடன் முடித்து வைக்கிறார் என்றும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளாதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் நீதிமன்ற தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் மீது சிறப்புகவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மீது தனிகவனம் செலுத்தி உடனுக்குடன் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் ஈரோட்டில் நடந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...