அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு

தொடக்கக்கல்வி/ பள்ளிகல்வி துறையில் -ஆங்கில வழி வகுப்புகள்- அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் துறை சார்ந்த இயக்குனர்களால் கோரப்பட்டுள்ளது .தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு10பள்ளிகள் வீதம் 320பள்ளிகளில்2012 - 2013ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப்பள்ளிகளில் சுமார்160பள்ளிகளில்1முதல்8ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாக ஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனவே முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும்5பள்ளிகளில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில்1ஆம் வகுப்பு மட்டும் இரண்டு ஆங்கில வழி இணைப்பிரிவுகள்2012 -13ஆம் ஆண்டில் தொடங்க அனுமதி வழங்கிட ஏதுவாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களது மாவட்ட அளவில்,ஊரகப் பகுதியில் இயங்கும்10அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளை தெரிவு செய்து,அப்பள்ளிகளில்1 ஆம் வகுப்பு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் தொடங்க ஏதுவாக அனைத்து விதத்திலும் ஆய்வு செய்து அப்பள்ளிகளின் விவரப்பட்டியல் இயக்குனருக்கு அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.