சாதி, வருமான, இருப்பிட சான்றுகளை 6ம் வகுப்பிலேயே பெறலாம்!

எதிர்கால சிரமங்களைத் தவிர்க்க, 6ம் வகுப்பிலேயேமாணவர்களுக்கு சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, சட்டசபையில் முதல்வர் தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கும், பல்வேறு வகையான உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கும், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவை தேவைப்படுகின்றன.இத்தகைய சான்றிதழ்களை தேவையான நேரத்தில் பெறுகையில், மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, அவர்களின் 6ம் வகுப்பிலேயே, இத்தகைய சான்றிதழ்களை பெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.இதன்மூலம், மாணவர்கள் அந்தஆண்டிலேயே மேற்கூறிய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் மூலம், 6ம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.