11, 12ம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான உதவித் தொகை.

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 11, 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஜுலை 29ம் தேதி நடைபெற உள்ளது.இத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.20,000 முதல் 25,000 வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த உதவித் தொகை பெற அபராதம் இல்லாமல் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்துவிட்ட நிலையில், ஜுன் 15ம் தேதி வரை ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஜுலை 15ம் தேதி வரை ரூ.200 அபராதம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இயற்பியல், வேதியியல், கணிதம்/உயிரியியல், ஆங்கிலும் ஆகியப் பாடப்பிரிவுகளில் இருந்து 200 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு 2 மணி நேரம் வழங்கப்படும்.மேலும் தகவல்களை அறிந்து கொள்ள www.nest.net.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...