கன்னியாகுமரி குலுங்கியது 10 ஆயிரம் ஆசிரியர்கள் பேரணி

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, கன்னியாகுமரியில் நேற்று மாலை 10 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று மாலை ஆசிரியர், ஆசிரியைகளின் பிரமாண்ட பேரணி நடந்தது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முருக செல்வராஜன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் அபிஜித் முகர்ஜி தொடங்கி வைத்தார். பேரணியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பேரணியில் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம், உருமி மேளத்துடன் தேவராட்டம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பேரணியால் போக்குவரத்து 1 மணி நேரம் தடைபட்டது. டி.எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நிறைவில் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்பு குழுவின் மூத்த துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.சியுமான மாயவன் வரவேற்றார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சி.என்.பாரதி ஆகியோர் மாநாட்டு முடிவுகளை விளக்கினர். சி.ஐ.டி.யு தொழிற்சங்க தலைவர் ஏ.கே.பத்மநாபன், பி.கே.பிஜு எம்.பி., முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸ், அனை த்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ராமச்சந்திரன், மதுரை காமராஜர் பல்கலை ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மனோகர ஜஸ்டஸ் ஆகியோர் பேசினர். வரவேற்புக்குழு பொருளாளர் கே.பூபாலன் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.