23 ஆயிரத்து 128 பேர் விரிவுரையாளர் தேர்வில் பங்கேற்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, 154 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்தில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக உள்ள, 154 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இப்பணியிடங்களுக்கான, தேர்வு,தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் நேற்று நடந்தது.இதற்கு, 26,328 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், உரிய சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் இல்லாத, 12 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள,26,316 பேருக்கு, ஹால் டிக்கெட்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியது.இவர்களுக்கான தேர்வு, சென்னையில் ஏழு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும் 67 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் ஒரு மணி வரை 23,128 பேர்தேர்வு எழுதினர். தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 3,188 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் தயார்: முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிற து.