பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - ஜூலை 2-ம் தேதி தொடக்கம்.

பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.எனினும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் பொதுப் பிரிவு கலந்தாய்வு, வழக்கம்போல் எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ம்தேதி தொடங்கி முடிந்த பிறகு, ஜூலை 9-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கலந்தாய்வின் முதல் நாளான ஜூலை 2-ம் தேதி, எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.இந்த மூன்று விளையாட்டு இடங்களுக்கான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் குழு தேர்வு செய்து அளிக்கும் நடைமுறை உள்ளது. எனவே எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் அதே ஜூலை 2-ம் தேதி, அண்ணா பல்கலைக்கழக பி.இ.-பி.டெக். சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்குகிறது.ஜூலை 3 முதல்...: தொழில் கல்வி மாணவர்களுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் நடைபெறும்.பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதிக்குப் பிறகு தொடங்கும் என்று உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.கலந்தாய்வு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.