ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் - அதிக என்ணிக்கையில் உள்ள குறிப்பிட்ட பாட ஆசிரியர் மாறுதலுக்கு பின்னரே, பொதுமாறுதல்.

அரசு பள்ளிகளில், குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை மாறுதல் செய்த பிறகே, ஆசிரியர் பொது மாறுதல், கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவேதான், விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இடமாறுதல் "கவுன்சிலிங்" அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மே, ஜூன் மாதங்களில், பொது பணியிட மாறுதல், "கவுன்சிலிங்" நடத்தப்படும். இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, பின் ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்பட்டு, பொது மாறுதல்"கவுன்சிலிங்" நடத்தப்படும்."கவுன்சிலிங்" நடைபெறும் நாளன்று காலையில், காலியிட பட்டியல் வெளியிடப்படும். அப்போது, பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து, உத்தரவுகள் வழங்கப்படும்.நடப்பாண்டு கவுன்சிலிங்கிற்காக, ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில், தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகிய இரு துறைகளிலும், கடந்த சில தினங்களாக விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளது.காரணம் என்ன?இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: இருதுறை சார்ந்த பள்ளிகளிலும், குறிப்பிட்ட சில பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்துப் பாட ஆசிரியர்களும், சம எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இந்த குறையை சரிசெய்யாமல், "கவுன்சிலிங்" நடத்தினால் பிரச்னை ஏற்படும்.எனவே, முதலில் எந்தெந்த பள்ளிகளில், ஒரே பாட ஆசிரியர்கள் அதிகளவில் இருக்கின்றனரோ, அவர்களை, தேவையான வேறு பள்ளிகளுக்கு மாற்றி, அதன்பின் ஆசிரியர் மாறுதல் "கவுன்சிலிங்" நடத்தலாம் என, அரசு கருதியுள்ளது.மே இறுதியிலோ அல்லது ஜூன் 15 தேதிக்குள், பொது மாறுதல்"கவுன்சிலிங்" நடைபெறும். அரசாணை வெளிவந்ததும்,"கவுன்சிலிங்" தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.courtesy : dinamalar.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.