குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் - 1 முக்கியத் தேர்வுஎழுதுபவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 10 மையங்களில் குரூப் 1 பணிக்கானமுக்கியத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click here & Download the GROUP 1 - Hall Ticket  

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, குரூப்௧ நிலையிலான பணிகளில், 131 காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூன் 5ம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவில், 2,795 பேர், முக்கியத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.     இதைத் தொடர்ந்து, முக்கியத்தேர்வு, 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சென்னையில் மட்டும், 10 மையங்களில், இந்தத் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு பணியிடத்திற்கான தேர்வும், இரு தாள்களாக நடக்கிறது.பொது அறிவுத் தாள்களாக, தலா 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 2,795 பேருக்கும், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.tn.gov.in) நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டன. இவற்றை இணையதளம் மூலமாகவே, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.