அண்ணா பல்கலையின் கீழ், மாநிலம் முழுவதிலுமுள்ள 535 பொறியியல் கல்லூரிகளும் இணைக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை மாணவர்கள் பின்பற்ற ஏதுவாக, சென்னையிலுள்ள அண்ணா பல்கலையின் கீழ், மாநிலம் முழுவதிலுமுள்ள 535 பொறியியல் கல்லூரிகளும் இணைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன்மூலம், உலகளாவிய உயர்கல்வியை மாணவர்கள் மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளிலுள்ள பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளாக மாற்றப்படும்.மேலும், நிர்வாக வசதிக்காக, திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும். எதிர்காலத்தில், அனைத்து தேர்வுகளும், மாநிலம் முழுவதிலுமுள்ள, பல்கலைக்கழகத்தின் 17 பிராந்திய அலுவலகங்களால் நடத்தப்படும்.அனைத்து பொறியியல் கல்லூரிகளும், ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படுவதால், மாணவர்கள் ஒரேவிதமான பாடத்திட்டத்தை படிக்கும் நிலை ஏற்படுவதோடு, உயர்கல்வியை உலகளாவிய அளவில் மேற்கொள்ளும் நிலை வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.