மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்ல தடை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை உள்பட பல இடங்களில் சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் குறிப்பாக உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை கொண்டு செல்வதும், வகுப்பறையில் பேசுவதும், பள்ளிக்கு போகும்போதும் வீட்டுக்கு வரும்போதும் அதே கவனத்தில் இருப்பதும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த. சபீதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதனை அடுத்து செல்போனை பள்ளிக்கு கொண்டு செல்ல பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கைஅனுப்பும்படி அவர் உத்தரவிட்டு உள்ளார்.
Comments
Post a Comment