தொடக்கக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்குபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு எப்போது?

சென்ற ஆண்டு 2011-12 நிலை உயர்த்தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் உருவான  1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 6, 7, 8 வகுப்புகளை கையாண்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் அல்லது  பதவி உயர்வு பெறும்போது அப்பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றப்பட்ட பணியிடங்கள் மற்றும் கட்டாய கல்வி சட்டம் மூலம் உருவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான இடைநிலை மற்றும் இடைநிலை தலைமையாசிரியரை கொண்டு  பதவி உயர்வு கலந்தாய்வு மூலம்  நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அனால்,நடந்து முடிந்த கலந்தாய்வில் 1267 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது அப்பணியிடங்களுக்கு மட்டும் அல்லாமல் 6 முதல் 8 வகுப்புகளுக்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் எனும் கட்டாய கல்வி சட்டப்படி தேவை என்பதால் பலருக்கு பதவியுயர்வு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.     பணி நிரவல் கலந்தாய்விற்குப்பின் பிறகு மாறுதல் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பணியடங்கள் நிரப்பப்பட வாய்ப்பு இருப்பதால் அதே ஒன்றியத்தில் பதவியுயர்விற்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே முன்கூட்டியேபதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.       அனால் பதவி உயர்வு கலந்தாய்வு எப்போது? 21.07.2012 மற்றும் 23.07.2012 அன்று என்றும் 30.07.2012 மற்றும் 31.07.2012 என்றும் அந்தந்த மாவட்டங்களில் என்றும் சென்னையில் என்றும் பல தேதிகள் செய்திகள் தொடர்ந்த வருகின்றன. மேற்காணும் தகவல்களில் சில சரியாக இருக்க வாய்ப்பு இருந்தாலும் , இதுவரை துறை ரீதியான அறிவிப்பு வந்த பின்பே உறுதியான தேதியை நாம் அறிய முடியும். இது சார்ந்த முறையான அறிவிப்பு இன்றோ நாளையோ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.