டிஇடி மட்டும் போதாது போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர் நியமனம்

''ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) எழுதி தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்'' என்று கல்வி துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் பல லட்சம் பேர் மற்றொரு தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற ''ஷாக்'' செய்தியால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் போது, தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்திற்குபல மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநில அரசுகளோ, ''நாங்கள் ஏற்கெனவே போட்டித் தேர்வுகளை நடத்தித்தான் ஆசிரியர்களை ''செலக்ட்'' செய்கிறோம்'' என்று கூறின. ''பி.எட் பட்டம் பெற்றவர்களைத்தான் நாங்கள் ஆசிரியர்களாக நியமிக்கிறோம்'' என்று சில அரசுகள் தெரிவித்தன. ஆனாலும் தேர்வு நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு கறார் காட்டியது.பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போனதும், பி.எட், டி.டி.எட் ஆகிய தேர்வு முறைகள்சரியில்லாததால் அந்த பட்டங்கள் பெற்ற ஆசிரியர்கள் தரமில்லாதவர்கள் என்ற கண்ணோட்டமும்தான் மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ''ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதில் 60 சதவீதம் அல்லதுஅதற்கு மேலும் மதிப்பெண் எடுக்கும் பட்டதாரிகள்தான் தரமான ஆசிரியர்கள். அதில் தேர்ச்சி பெறுவோர் 7 ஆண்டுகள்வரை ஆசிரியர் பணி பெற தகுதி உடையவர்கள்.ஆனால் அப்படி தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்தும் போது மாநில அரசுகள் எந்த  முறையை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்'' என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்த மாநிலத்தின் ஆசிரியர் தேர்வு வாரியம் மேலும் ஒரு போட்டித் தேர்வு நடத்தியது.ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 20 சதவீத மதிப்பெண்ணும், போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் 80 சதவீதமும் ''வெயிட்டேஜ்ஜாக'' எடுத்துக் கொள்ளப்பட்டு ஆந்திராவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆசிரியர் பணி நியமனம் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலா? அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலா என்பதை இன்னும் அரசு  வெளிப்படையாக அறிவிக்கவில்லை.''ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஒரு லைசென்ஸ் தான். அதைக் கொண்டு ஆசிரியர்களை நியமிக்க முடியாது. எனவே அவர்களுக்கு போட்டித் தேர்வு ஒன்று நடத்திய பிறகு அதில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார் களோ அவர்களுக்குத்தான் பணி நியமனம் வழங்கப்படும்'' என்று கல்வி அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் நடந்துள்ளதால், விண்ணப்பித்த பலர் அந்த தேர்வை சரியாக எழுதாத நிலையில், தேர்ச்சி பெற்றவர்களும் மற்றொரு போட்டித் தேர்வை எழுதினால் மட்டுமே ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவை பின்பற்றி தமிழகமும் ஆசிரியர் பணி நியமனத்தில் போட்டித் தேர்வை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.''பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போனதும், பி.எட், டி.டி.எட் ஆகிய தேர்வு முறைகள்சரியில்லாததால் அந்த பட்டங்கள் பெற்ற ஆசிரியர்கள் தரமில்லாதவர்கள் என்ற கண்ணோட்டமும்தான் மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம்''

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.