முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட முடிவு
முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வு நடந்தது. மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், 3,100 பேர், நேற்று மாவட்ட தலை நகரங்களில்நடந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறும்போது, ""அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்தன. ஒரு வாரத்தில், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றனர்.
Comments
Post a Comment