ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்தவார இறுதிக்குள் வெளியிடப்பட வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்தவார இறுதிக்குள் வெளியிடப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முக்கிய விடைகள் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து ஏராளமானோர் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் அந்தந்த பாட நிபுணர்களை வைத்து ஆராயப்பட்டது.மொத்தம் 150 முக்கிய விடைகளில் 4 விடைகளில் மட்டும் மாற்றம் இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான முக்கிய விடைகள் தொடர்பாக பெறப்பட்ட ஆட்சேப மனுக்கள் திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட உள்ளன.இரண்டு தாள்களுக்கும் முக்கிய விடைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு, அரசுடன் ஆலோசித்து வரும் வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.தகுதி மதிப்பெண் குறைப்பு? ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெறாத சூழல் எழுந்தால், சில பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர்இரண்டு தாள்களையும் எழுதினர்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.