உடற்கல்வி ஆசிரியர் தேர்வு: முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் குளறுபடி?

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நடந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வில், முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், பதவி மூப்பு அடிப்படையில் 1,023 உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிட்டது. 1:5 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு, ஐந்து சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆறு நாட்களுக்கு முன், இணைய தளத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியானது. இந்த பட்டியலை பார்த்த, முன்னாள் ராணுவத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் கோட்டாவில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டியல் வெளியானது.இதில் விழுப்புரம் மாவட்டத்தைசேர்ந்த 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒரே மாவட்டத்தில் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதும், இவர்களின் பிறந்த தேதியை வைத்து பார்க்கும் போதும், தேர்வு செய்யப்பட்டவர்கள் முன்னாள் ராணுவத்தினராக இருக்க வாய்பில்லை என்பதும் தெரியவந்தது.இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விசாரித்த போது, தங்கள் மாவட்டத்தில் 4 பேர் பேர் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் கோட்டாவில் உள்ளதாக தெரிவித்தனர். உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் முன்னாள் ராணுவத்தினர், இடஒதுக்கீட்டில், நடந்த குளறுபடி குறித்து ஆசிரியர் தேர்வு வாரியமும், வேலைவாய்ப்பு அலுவலகமும் தெளிவுபடுத்த வேண்டும், என பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவநல சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Tamil dt

பி.எப். சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்த முடிவு

அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...