செவிலியர் பட்டயப் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
செவிலியர் பட்டயப் படிப்பில்,மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் குறிப்பிட்ட மாவட்ட தலைமைமருத்துவமனைகளில்,பெண்களுக்கான,இரண்டாண்டு செவிலியர் பட்டயப் படிப்பிற்கு2,000இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க,இந்த ஆண்டு, 12,400பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின், "கட்- ஆப்'மதிப்பெண் அடிப்படையிலான தர வரிசை பட்டியலை,மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்,தங்கள் தர வரிசையை,www.tnhealth.org இணையதளத்தில் அறியலாம். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறும் போது, ""செவிலியர் பட்டயப் படிப்பிற்கு,ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்,''என்றார்.
Comments
Post a Comment