முப்பருவ கல்வி: புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற டிசம்பர் 7 கடைசி நாள்
முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிசம்பர் 7ம் தேதி கடைசி நாளாகும்.முப்பருவ
முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை,இறுதி செய்யப்பட்ட,
மூன்றாம் பருவ பாடத்திட்டம் பெற்றோர்,மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து, மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும்
பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட
அறிக்கை:
மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட,மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின்
அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ்
பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை,முப்பருவ
கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார்
செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர்,பாடப் புத்தகங்களின்,இரண்டு நகல்களை,"உறுப்பினர் - செயலர் மாநில பொதுப்
பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி),கல்லூரி சாலை,
சென்னை-6
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பாடப் புத்தகங்கள்,மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80
ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும்,
சிடிபி பிரின்டிங்கிலும்,200 ஜி.எஸ்.எம்., வர்ஜின்
கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள்
அனுப்பி வைக்க வேண்டும்.வரைவு பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது. 7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ்,2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை,இறுதி செய்யப்பட்ட,மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில
பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல்
அளிக்கப்பட்டு பெற்றோர்,மாணவர், பள்ளிகள் மற்றும்
பொது மக்கள் பார்வைக்காக இணையதளத்தில்
வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில்
கூறப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment