வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு

வி.ஏ.ஓ.தேர்வு முடிவை வெளியிட தடை கோரி,
மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.முதுகுளத்தூர் அருகே கீழகன்னிசேரி சரவணன் உட்பட, 4 பேர் தாக்கல்
செய்த மனு:
வி.ஏ.ஓ.,க்கள், 3488 பேரை நியமனம் செய்ய,2011 பிப்., 20 ல் தேர்வு நடந்தது. இதில்,ஆதி திராவிடர்களுக்கான,
1077 பின்னடைவு பணியிடங்கள் அடங்கும். நாங்கள்
தேர்வு எழுதினோம்.2011 ஜூலை, 19 ல் முடிவு வெளியிடப்பட்டது.பின்னடைவு பணியிடங்களில்,
270 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
பணியில் சேராதவர்கள்,பணியிலிருந்து விலகியவர்கள்,
வேறு வேலைகளுக்குச் சென்றவர்களால் ஏற்படும்,
காலிப் பணியிடங்களில் எங்களை நியமிப்பதாக,
அரசு தெரிவித்தது.மேலும், 1870 வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க,2012 ஜூலை, 9 ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஏற்கனவே, பணியில் சேராமல் ஏற்பட்ட,
காலி இடங்களையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.குரூப் 2 தேர்வில்,ஏற்கனவே வி.ஏ.ஓ.,தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும்
பங்கேற்றுள்ளனர். இதனால்,காலிப் பணியிடங்கள்
ஏற்படும். முதலில்,வி.ஏ.ஓ.,தேர்வு முடிவு வெளியிட்டால்,எங்களது உரிமை,பணிவாய்ப்பு பாதிக்கப்படும்.குரூப் 2 தேர்வு முடிவை முதலில்
வெளியிட வேண்டும்.வி.ஏ.ஓ.,தேர்வு முடிவை வெளியிட,தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு,மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.