வரும் 13ஆம் தேதி பணிநியமன ஆணை வழங்க அரசு தீவிரம்

டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்,
பட்டதாரி ஆசிரியர் தேர்வும், டி.இ.டி.,தேர்வில்
தேர்ச்சி பெற்று, மாநில பதிவு மூப்பு அடிப்படையில்,
இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர்
என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது.பின்,
சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில்,
"டி.இ.டி., தேர்வு,ஒரு தகுதித் தேர்வே;அதில்,தேர்ச்சி பெறுபவர்களை,பணி நியமனம் செய்வதற்கு,தனி வழிமுறைகளை உருவாக்கி,அமல்படுத்த வேண்டும்'
என, உத்தரவிடப்பட்டது.இதனால், இறுதிப் பட்டியல்
வெளியிடுவது தள்ளிப் போனது.அமைச்சர்
தலைமையிலான குழு,புதிய விதிமுறைகளை
உருவாக்கியதும்,அதை அமல்படுத்த,அரசு உத்தரவிட்டது.அதன்படி, பிளஸ் 2,பட்டப் படிப்பு, பி.எட்.,- ஆசிரியர் பட்டயப் பயிற்சி என,
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி,"வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அதன் அடிப்படையில்,இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, நீண்ட நாட்களாக
நடந்து வந்தது.பணிகள் முடிந்ததை அடுத்து,இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,நேற்று வெளியிட்டது.
அதில், 18 ஆயிரத்து,382 பேர், இடம் பிடித்தனர்.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்; பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 8,718 பேரும், தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர்,ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும்,குறிப்பிட்ட சில இன சுழற்சிப்
பிரிவுகளில்,தகுதியானவர்கள் கிடைக்காததால், 961
பேரை தேர்வு செய்ய முடியவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
அமாவாசை நாளில் விழா:
அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும்
ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை,
விமரிசையாக நடத்த,பள்ளிக் கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது.அமாவாசை நாளான,13ம் தேதி,
விழா நடக்கும் எனவும்,அதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று,தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு,பணி நியமன உத்தரவுகளை வழங்குவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இறுதிப் பட்டியல் வெளியான உடன், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து , "ஆன்-லைன்' வழியாக,கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறு, பள்ளிக்
கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில்,விழாவை நடத்தி,பணி நியமன
உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால்,அதிகாரிகள் மின்னல் வேகத்தில், அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.