அதிரடியாய் நடக்கும் - ஆசிரியர் பணியிட கலந்தாய்வு ஏற்பாடுகள் - டிசம்பர் 13 ல் கலந்தாய்வு...
ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்ச்சி அடைந்துள்ள
ஆசிரியர்களுக்கு பணியிட கலந்தாய்வு வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நடக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இறுதி கட்டமாக வரும்
திங்கட்கிழமை 10 ஆம் தேதி சென்னையில் சான்றிதழ்
சரிபார்ப்பு இறுதி கட்டமாக நடத்தப்படுகிறது.இதனை தொடர்ந்து டிசம்பர் 13 வியாழன் அன்று ( நிறைந்த
அமாவாசை தினம்) ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் SSA மையங்களில் ஆன்லைன் மூலமாக பணியிட கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன
ஆணைகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆன்லைன் மூலமான கலந்தாய்வு என்பதால் துரிதமாகவும் எளிமையாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.இடைநிலை ஆசிரியர்
பணியிடங்கள் 1:30 என்ற அடிப்படையில் மாற்றமாவதால் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும்
தலா 400 காலி பணியிடங்கள் வீதம் 10 ஆயிரம்
அளவிற்காவது பணியிடங்கள் நிரப்பபட வாய்ப்புகள்
உள்ளன.ஒரே நாளில் அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படுமா? என்பதும் இடைநிலை ஆசிரியர்களின் மொத்த பணியிடங்கள் எத்தனை என்பதும் இனிதான் தெரியவரும்.
Comments
Post a Comment