பள்ளிகளில் வரும் 17ல் இரண்டாம் பருவ தேர்வு துவக்கம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழப்பம

பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வு வரும் 17ம் தேதி துவங்க உள்ள நிலையில்,ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருவதால் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்ற குழப்பத்தில் மாணவர்கள்
உள்ளனர்.இலவச கட்டாயகல்வி உரிமை சட்டம் 2009ன் படி 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். இந்நிலையில் கல்வி வியாபாரமாவதை தடுப்பதற்காகவும்,அனைத்து மாணவர்களுக்கும்
தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்ற நோக்கில்
பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.இதை தொடர்ந்து தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது.ஏற்றத்தாழ்வு இல்லாமல் மாணவர்கள் கல்வி பெற வேண்டும்.அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க
வேண்டும் என்ற நோக்கில் தனியார் மற்றும்மெட்ரிக்., பள்ளிகளிலும் சமச்சீர் கல்வியை அமல்
படுத்தப்பட்டது.மேலும் மாணவர்களுக்கு இலவச
சீருடை, மதிய உணவு,காலணி, புத்தகப்பை,
ஜாமெட்ரிக்பாக்ஸ்,சைக்கிள்,மடிக்கணிணி மற்றும்
கல்வி உதவித்தொகை எனபல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து,செயல் படுத்திவருகிறது.பள்ளி சீரமைப்பிற்கு ஆண்டு தோறும் தனியார் பள்ளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாயும்,அரசு பள்ளிகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.சமச்சீர் கல்வி பல
பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.1ம் வகுப்பு முதல் 4ம்
வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையும், 5ம்
வகுப்பிற்கு எளிமைபடுத்தப்பட்ட படைப்பாற்றல்
கல்வி முறையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் படைப்பாற்றல் கல்வி முறையில்
பாடப்பகுதியை படித்து புரிந்து கொள்ள வேண்டும். சந்தேகங்கள் ஏற்பட்டால் சகமாணவர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கேட்டு புரிந்து கொள்ள
வேண்டும். மேலும் இந்த கல்வியாண்டில் முப்பருவ
கல்வி அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர்
முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவமாகவும்,
ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவ
முறையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.தற்போது முதல் பருவ தேர்வு முடிந்துள்ளது.இரண்டாம் பருவ தேர்வு வரும் 17ம் தேதி துவங்குகிறது.17ம் தேதி தேர்வு எழுத
உள்ள 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்விற்கான
பாடபகுதிகள் மற்றும் கல்வி கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கடந்த சில
நாட்களுக்கு முன் துவங்கி வரும் 7ம் தேதி நிறைவடைகிறது.இதனால் தரமான கல்வி தங்கள்
குழந்தைகளுக்கு எப்படி கிடைக்கும் என  பெற்றோர்களும், மாணவர்களுக்கு எப்படி பாடம்
நடத்துவது என ஆசிரியர்களும்,இரண்டாம் பருவ
தேர்வுக்கான பாடத்தை எவ்வாறு படிப்பது என
மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் குளறுபடி

உண்மைத்தன்மை அவசியமா ?தகவலறியும் உரிமை சட்டம் விளக்கம