டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் முற்றுகை
கவுன்சிலிங்கில் வேலை கிடைக்காத 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு பாரிமுனையில் உள்ள
டி.என்.பி.எஸ்.சி.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி.,
அலுவலகத்தை நேற்று இரவு ஏழு மணியளவில்
10க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 50க்கும்
மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.தங்களை விட குறைவாக படித்தவர்களுக்கு வேலை அளித்துள்ள நிலையில்,தங்களுக்கு கவுன்சிலிங்கில் இடம்
கிடைக்காதது ஏன்? என டி.என்.பி.எஸ்.சி.,
அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து
முற்றுகையிட்டவர்கள் கூறியதாவது: சமீபத்தில் குரூப் 2 தேர்வு முடித்தவர்களுக்கு அரசு பணியிடங்களுக்கான
கவுன்சிலிங் நடந்தது.கவுன்சிலிங்கில் பங்கேற்ற என்னைப் போன்ற பலர், வெளியூர்களில் கிடைத்த வேலைகளை,குடும்ப சூழ்நிலை காரணமாக தவிர்த்து விட்டோம்.வேலை மறுத்ததற்கான சான்றில்
கையெழுத்து கேட்டதால் போட்டுக் கொடுத்தோம்.
பின்னாளில் நடந்த கவுன்சிலிங்கில் உள்ளூரிலேயே வேலை கிடைக்கும் என நம்பி இருந்தோம்.
இந்நிலையில் எங்களை விட குறைவாக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்துவிட்டது. ஆனால் அதிகம் மதிப்பெண் பெற்றும்,எங்களுக்கு இதுவரை பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறியவே டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை நாடி வந்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.டி.என்.பி.எஸ்.சி.,அதிகாரியான
சுகுமாரன் கூறுகையில்,"அவரவர் தகுதிக்கேற்ப
பணியிடங்கள் அனைத்தும் சட்டப்படியே ஒதுக்கப்பட்டு வருகிறது.ஆட்சேபனை இருப்பவர்கள்
கோர்ட்டில் கூட வழக்கு தொடர்ந்து தீர்வு பெறலாம் , என்றார்.
Comments
Post a Comment