ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டியல் பற்றிய -ஓர் பார்வை.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் 18,382 பேர் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9,664 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி
ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1,567
பேர் தகுதி பெறவில்லை.இந்தத் தேர்வுகளில் தேர்வு
செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் புதன்கிழமை
வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய
வட்டாரங்கள் தெரிவித்தன. பட்டதாரி ஆசிரியர்கள்,
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்
தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது. மொத்தம் 6.60 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் 2,448 பேர்
மட்டுமே வெற்றி பெற்றனர்.தமிழகத்தில் 19 ஆயிரம்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 9 ஆயிரத்துக்கும்
அதிகமான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, மீதமுள்ள ஆசிரியர்
பணியிடங்களை நிரப்பவும், இந்தத் தேர்வில் தேர்ச்சிப்
பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவும்
அக்டோபர் 14-ம்தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு
நடத்தப்பட்டது. இந்த மறுதேர்வு முடிவுகள் நவம்பர்    2-ம் தேதி வெளியிடப்பட்டன. மறுதேர்வில் 19,243 பேர்
(புதுச்சேரியையும் சேர்த்து) வெற்றி பெற்றனர்.
மறுதேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நவம்பர் 6
முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
அதன்பிறகு, தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கும்
பணி நடைபெற்றது.ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 1,416 பேரும், இரண்டாம் தாளில் 649 பேரும்
பணி நியமனத்துக்கு தகுதியானவர்கள் என
கண்டறியப்பட்டனர்.மறுதேர்வில் முதல் தாளில் 9,205 பேரும்,இரண்டாம் தாளில் 8,703 பேரும் ஆசிரியர்
நியமனத்துக்கு தகுதியானவர்களாக இருந்தனர். இரண்டுத் தேர்வுகளையும் சேர்த்து மொத்தம் 19,343
பேர் ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதியானவர்களாக
இருந்தனர்.இதில் 956 பேர் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர் என இரண்டுக்கும் தகுதி பெற்றிருந்தனர்.
அவர்கள் விருப்பம் தெரிவித்தவாறு ஏதேனும்
ஒரு பணிக்கு மட்டும் அவர்களின் பெயர்கள்
எடுத்துக்கொள்ளப்பட்டன.5 பேர் தகுதிச் சான்றிதழ்
மட்டுமே போதும் என்று தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து 18,382 பேர் கொண்ட இறுதிப் பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் 9,664 பேர் இடைநிலை
ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி
ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் பள்ளிக் கல்வித் துறை,தொடக்கக் கல்வித்
துறைகளில் சில நாள்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.பணி நியமனத்தில்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரம்
பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் எப்போது?
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு
வெளியிடுவதில் நீதிமன்ற வழக்குகள் உள்பட சில பிரச்னைகள் உள்ளன.இவை சரிசெய்யப்பட்டதும்
உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு வாரியத்தின்அதிவேகம்:
ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14-ம் தேதிதான்
நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிவேகமாகச் செயல்பட்டு நவம்பர் 2-ம் தேதியே தேர்வு முடிவை அறிவித்தது.இப்போது
இறுதிப்பட்டியலும் தயாராகி,வெற்றி பெற்றவர்களுக்கு
வேலையும் கிடைக்க உள்ளது. வெறும் 18 அலுவலர்கள், ஊழியர்களுடன் செயல்படும் ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் வேகம் பலரையும் வியப்பில்
ஆழ்த்தியுள்ளது.10,714 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள் காலி இப்போது புதிதாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள்
போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
வேண்டியுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய
எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப
முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
உள்ளன.
பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள
பட்டதாரி ஆசிரியர்கள்,காலிப்பணியிடங்கள்
விவரம்:
பாடம் முந்தைய காலியிடங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளவர்கள்,இப்போதைய காலியிடங்கள்
1. தமிழ்              : 2,298 -1,815 -483
2. ஆங்கிலம்    : 4,826 -3001-1,825
3. கணிதம்         : 2,664- 1,365 -1,299
4. இயற்பியல்   :  1,454- 410-1,044
5. வேதியியல்  : 1,453- 643-810
6. தாவரவியல் : 625- 62 -563
7. விலங்கியல் : 622 -74 -548
8. வரலாறு         : 4,304 -1,182-3,122
9. புவியியல்     : 1,076- 75-1,001
10. சிறுபான்மையின
மொழிப்பாடங்கள் :110- 91-19
மொத்தம்           :19,432 -8,718- 10,714

Comments

Popular posts from this blog

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக்கல்வித்துறை ( DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.