தட்டச்சர் பணி இடங்களுக்கு கலந்தாய்வு துவங்கியது
தமிழக அரசின், பல்வேறு துறைகளில்,3,405 தட்டச்சர்
பணியிடங்களை நிரப்புவதற்கான,சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு,டி.என்.பி.எஸ்.சி.,அலுவலகத்தில்,நேற்று துவங்கியது.சமீபத்தில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வு மூலம்,10 ஆயிரம் பேர்,பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களில்,ஒவ்வொரு பிரிவாக,
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு ஆணை
வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.சுருக்கெழுத்தர்
தட்டச்சர்களுக்கு,துறை ஒதுக்கீட்டு ஆணை
வழங்கப்பட்டதை அடுத்து,3,405 தட்டச்சர்
பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில்,நேற்று துவங்கியது.
தினமும், 500 பேர் வீதம் அழைக்கப்பட்டு,கலந்தாய்வு
நடத்தப்படுகிறது.இந்தப் பணிகள் முடிந்ததும், 5,657
இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம்,17ம் தேதி முதல் நடக்கிறது.
Comments
Post a Comment