கூட்டுறவு சங்க உதவியாளர் பணி: இணையதளத்தில் நுழைவுச் சீட்டு.
கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணி தேர்வுக்கான
நுழைவுச் சீட்டு பெறாதவர்கள் இணையதளம் மூலம்
நுழைவுச் சீட்டு பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆர்.சீதாலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள் சேர்ப்பு நிலையம்
அறிவித்திருந்த பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில்
உதவியாளர் பணிக்கான நுழைவுச் சீட்டு விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நுழைவுச் சீட்டுகளை வியாழக்கிழமைக்குள் (டிசம்பர்6) தபால் மூலமாக பெறாத விண்ணப்பதாரர்கள்,
www.tncoopsrb.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுச் சீட்டில் புகைப்படம்,
கையெழுத்து இல்லாதவர்கள் புகைப்படத்தை ஒட்டி
கையெழுத்திட வேண்டும்.நுழைவுச் சீட்டுடன் ஓட்டுநர் உரிமம்,வங்கிக் கணக்கு புத்தகம்,பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை,கல்லூரி அடையாள
அட்டை, பான் கார்டு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு கூடத்துக்கு கொண்டு வரவேண்டும்.அவ்வாறு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள்,டிசம்பர் 7, 8 ஆகிய
தேதிகளில் விண்ணப்பித்தற்கான ஆதாரத்துடன்
கூட்டுறவுச்சங்கங்களின் கூடுதல் பதிவாளர்
அலுவலகத்தில் நுழைவுச் சீட்டை பெறலாம்.மேலும்
விவரங்களுக்கு,
"கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அலுவலகம்,
91, புனித மேரி சாலை,
டி.ஏ.என்.எஃப்.இ.டி.அலுவலகம் (3-வது மாடி),
அபிராமபுரம்,
சென்னை - 18'
என்ற முகவரியிலோ 044 24616503, 24614289 என்ற
எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அவர்
தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment