தொழிற் கல்வி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி மேல்நிலைப்
பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர்கள் சென்னையில் நாளை (8ம் தேதி) உண்ணாவிரத போராட்டம்
நடத்துகின்றனர்.தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப்
பள்ளிகளிலும் தொழிற் கல்வி பாட பிரிவு தொடங்கப்பட வேண்டும். தொழிற் கல்வி ஆசிரியர்கள்
பணியிடம் உருவாக்கி தொழிற் கல்வி ஆசிரியர்களை
நியமிக்க வேண்டும்.தமிழக அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தால் முழு ஓய்வூதியம் வழங்க
வேண்டும். மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி முதுகலை தொழில் கல்வி ஆசிரியர்கள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு
தலைமை ஆசிரியர்,உதவி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.இக்கோரிக்கைகள் உட்பட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நாளை (8ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்
என்று மாநில துணைத் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
Comments
Post a Comment