TET - 10 ஆயிரம் இடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை
இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 10
ஆயிரம் பேர்,தேர்வு செய்யப்பட வேண்டும்; ஆனால்,
9,664 பேர்,தேர்வு பெற்றுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து 432 பேர் தேவை; ஆனால், 8,718 பேர் மட்டுமே,இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர்.இன்னும், 10 ஆயிரத்து, 714 இடங்களுக்கு,
தகுதியானவர்கள் கிடைக்கவில்லை.பல லட்சம் பேர்
தேர்வு எழுதிய போதிலும், டி.இ.டி.,தேர்வில், 60 சதவீத
மதிப்பெண்கள் எடுக்காததால்,இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக,துறை வட்டாரங்கள் தெரிவித்தன.டி.ஆர்.பி., சாதனை:வெறும், 15
ஊழியர்களுடன் இயங்கி வரும்,டி.ஆர்.பி.,ஜூலை மற்றும் அக்டோபரில், 15 லட்சம் பேருக்கு, தேர்வை நடத்தி,பல்வேறு பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப்
பட்டியலை, எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட்டு,
சாதனை படைத்தது.இதற்காக, டி.ஆர்.பி.,தலைவர் சவுத்ரி முதல்,கடைநிலை ஊழியர் வரை, அனைவரும்,
அரசு விடுமுறை நாட்களிலும், இரவு,12:00 மணி வரையிலும் வேலை பார்த்ததாக,துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
Comments
Post a Comment