Posts

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். முதலாமாண்டு தேர்வு அட்டவணை:*. ஜூலை 4 - புதன் - கற்கும் குழந்தை *.ஜூலை 5 - வியாழன் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-1*. ஜூலை 6 - வெள்ளி - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 1, இளஞ்சிறார் கல்வி - 1 *. ஜூலை 9 - திங்கள் - ஆங்கில மொழிக் கல்வி - 1 *. ஜூலை 10 - செவ்வாய்-கணிதவியல் கல்வி -1 *.ஜூலை 11 - புதன் - அறிவியல் கல்வி -1 *.ஜூலை 12 - வியாழன் - சமூக அறிவியல் கல்வி-1 2-ம் ஆண்டு தேர்வு அட்டவணை:*. ஜூன் 25 - திங்கள் - இந்திய கல்வி முறை *. ஜூன் 26 - செவ்வாய் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் - 2 *.ஜூன் 27 - புதன் - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உறுது, மலையாளம்) -2, இளஞ்சிறார் கல்வி - 2*. ஜூன் 28 - வியாழன் -ஆங்கில மொழிக் கல்வி -2 *.ஜூன் 29 - வெள்ளி - கணிதவியல் கல்வி - 2 *. ஜூன் 30 - சனி - அறிவியல் கல்வி - 2 *.ஜூலை 2 - திங்கள் - சம...

தமிழக கல்வித் துறையில் நடப்பாண்டில் 6 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் சுமார் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.இதில் இடைநிலை உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களிடமிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவிஉயர்வு தற்காலிக சீனியாரிட்டி பட்டியலில் 1,227 பேர் இடம் பெற்றுள்ளனர்.இதே போல், பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் 2 பணியிடங்களில் இருந்து சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 638 பேர் இடம் பெற்றுள்ளனர்.மேலும், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு இதில் 215 பேர் இடம் பெற்றுள்ளனர்.நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆச...

NATIONAL LEVEL - CCRT, NCERT, RIE+RIESI TRAINING -TEACHERS LIST CALLED FOR

NCERT மற்றும் CCRT பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள (  இடைநிலை,  பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி) ஆசிரியர்களின் பட்டியல் கேட்பு -  இயக்குனர் ஆணை . இங்கே கிளிக் செய்து ...

நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

தனியார் பள்ளிகள், சிறுபான்மைபள்ளிகள் 318 க்கு, ஓய்வுபெற்றநீதிபதி தலைமையிலான குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்தப் பள்ளிகளுக்கு வரும் டிசம்பருக்குள் புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அனைத்து பள்ளிகளுக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்தது. இதில் அதிருப்தியடைந்த 6,400 பள்ளிகள், குழுவின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்தன. இதற்கிடையில், நீதிபதி கோவிந்தராஜன் குழுவில் இருந்து விலகினார்.எதிர்ப்பு: இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். அப்பீல் செய்த பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, கடந்தஜூன் மாதம் நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் 318 தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகள் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தன.மனுக்களில், "எங்கள் தரப்பு முறையீடுகளை கேட்கும்போது, போதிய சந்தர்ப்பத்தை குழு அளிக்கவில்லை....

திறந்தநிலைப் பல்கலை. பி.எட். படிப்பு: நாளைமுதல் விண்ணப்பம் விநியோகம்

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பிற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (மே 4) முதல் வழங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ். சண்முகையா அறிவித்துள்ளார்.வரும் ஜூலை 27-ம் தேதி வரை இந்தவிண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2013பிரிவில் மொத்தம் ஆயிரம் இடங்கள் உள்ளன. தமிழ் வழியில் 500 இடங்களும், ஆங்கில வழியில்500 இடங்களும் உள்ளன.தமிழகம் முழுவதும் 11 ஒருங்கிணைப்பு மையங்களில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.சென்னையிலுள்ள அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரி, கோவையில் எஸ்.என்.ஆர். கல்லூரிஉள்ளிட்ட மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. ரூ.500 பணமாகச் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.அஞ்சல் மூலம் பெற ரூ.550 வரைவு காசோலையை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை-15 என்ற பெயரில் எடுத்து பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577, அண்ணாசாலை, சென்னை-15 என்றமுகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் ...

TAMIL NADU | TEACHERS PROMOTION PANEL 2012-2013 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் | KALVI SEITHI PROMOTION PANEL 2012

ஆசிரியர்கள் கவனத்திற்கு :இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர்விடுபட்டு இ...

மே 22-ல் பிளஸ் 2 முடிவு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 22-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை தெரிவித்தார்.தேர்வு முடிவுகள் இணையதளங்களில் மே 22 காலை வெளியிடப்பட உள்ளன.பிளஸ் 2 தேர்வு மார்ச் 8 முதல் 30 வரை சுமார் 2 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 8.2 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது.பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்கள் "டம்மி' எண் வழங்கப்பட்டு பல்வேறு தேர்வு மையங்களில் திருத்தப்பட்டன.விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து அவ்வப்போது பெறப்பட்ட மதிப்பெண்கள், சென்னையிலுள்ள டேட்டா சென்ட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்த பிறகு மொத்தமாக சி.டி.க்களில் இந்த மதிப்பெண் விவரங்கள் பெறப்படும்.அதன்பிறகு, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்களும், சி.டி.க்களில் பெறப்பட்ட மதிப்பெண்களும் சரிபா...