எல்லா பள்ளிகளிலும் மார்ச் 31க்குள் கழிவறை வசதி : தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும மாணவர்களுக்கு கழிவறை வசதிகளை சீர்செய்தும்,
இல்லாத இடங்களில் புதியதாக கட்டிடம் கட்ட
வேண்டும்; வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் கழிவறை வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியா முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதை சீர்
செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில்
தெரிவித்துள்ளது.மேலும், மாணவ மாணவிகளுக்கு என தனியாக கழிவறை கட்ட வேண்டும் என உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுதொடர்பாக, மாநில
தலைமை செயலர்களுக்கு மத்திய அரசு சார்பில்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள
சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி,
தொடக்கப் பள்ளி,நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,
மேல்நிலைப் பள்ளி ஆகிய அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள கழிவறை வசதிகள் குறித்து நூறு சதவீதம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.இதில் பல
ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட கழிவறைகளில் மேல்
கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பவை,தண்ணீர்
தொட்டி இல்லாதவை,தண்ணீர் வசதி இல்லாதவை குறித்து,உடனடியாக கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.மேலும் மாணவ,மாணவிகளுக்கு என தனித்தனியாக கழிவறை வசதி இருக்கிறதா என
ஆய்வு செய்ய வேண்டும்.இல்லாத பள்ளிகளில்
உடனடியாக கழிவறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வரும் மார்ச் மாதம் 31ம்
தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் முழு கழிவறை வசதிகள் இருக்க வேண்டும்.இவ்வாறு அந்த
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment